வியாபாரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாபாரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 22 அக்டோபர், 2025

தூத்துக்குடியில் மழைநீர் தேங்கி வியாபாரிகள் விரக்தி

தூத்துக்குடி, அக்.22:

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நான்கு நாட்களாக பெய்து வரும் நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் சரியாக வடியாமல் தேங்கி நிற்பதால் வியாபாரிகளும் பொதுமக்களும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

தூத்துக்குடி பிரெஞ்சு சாப்பல் சாலையில் தீவிர பாதிப்பு

மாநகராட்சி 40-வது வார்டுக்கு உட்பட்ட பிரெஞ்சு சாப்பல் சாலையில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மொத்த வியாபாரிகளின் கடைகள் அதிகம் அமைந்துள்ள இந்த சாலையில் நான்கு பள்ளிகளும், ஒரு தேவாலயமும் உள்ளன.

thoothukudileaks


மழைநீர் தொடர்ந்து தேங்கி நிற்பதுடன், நீர் வடிந்த பின்னரும் சாலையில் கழிவுகள் குவிந்து கிடப்பதால் நடந்தோ, வாகனங்களிலோ செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வியாபாரமும் கல்வியும் பாதிப்பு

சிறு வியாபாரிகள் சரக்குகள் வாங்க வருவதற்கு தயங்கும் நிலை உருவாகியுள்ளது. பள்ளிச் செல்லும் குழந்தைகள் சேறு சகதியில் நடக்கும்போது கீழே விழும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

வியாபாரிகளின் கோரிக்கை

வியாபாரிகள் ஒட்டுமொத்தமாக குரல் கொடுத்து, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

"வரும் காலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காண வேண்டும். தற்போதைக்கு குறைந்தபட்சம் சாலையில் குவிந்துள்ள சேறு சகதிகளை அப்புறப்படுத்த வேண்டும்" என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையையும், வியாபாரத்தையும் கடுமையாக பாதித்துள்ள இந்த பிரச்சினைக்கு மாநகராட்சி நிர்வாகம் விரைந்து தீர்வு காண வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


திங்கள், 9 டிசம்பர், 2024

மத்திய-மாநில அரசை கண்டித்து வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் இன்று நெல்லையில் ரெயில்வே நிலையம் முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Tamil Nadu updates,

செய்தி:-அருணன் 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் நெல்லை தூத்துக்குடி வியாபாரிகள் மத்திய மாநில அரசுகளை கண்டித்து நெல்லையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதுபற்றி செய்தியாவது:-


மத்திய மாநில அரசுகளை கண்டித்து!!!

கடை வாடகைக்கு மத்திய அரசு 18% ஜிஎஸ்டி
விதித்திருப்பதையும் மாநில அரசு தொழில் உரிமை
கட்டணத்தை உயர்த்தி இருப்பதையும், மத்திய மாநில அரசுகள்
ஆன்லைன் வர்த்தகத்திற்கு சாதகமாகவும்சில்லறை வணிகத்திற்கு
எதிராக செயல்படுவதை கண்டித்து
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இன்று... 

(10.12.2024 )திருநெல்வேலி இரயில் நிலையம் காமராஜர் சிலை முன்பு காலை 10 மணியளவில் நெல்லை மற்றும் தூத்துக்குடி சங்க வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

M.பத்ரு ஜமால்
நெல்லை மாவட்ட தலைவர் 

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் தலைவர் தெர்மல் ராஜா செயளாலர்  ஜவகர் பொருளாளர் திரு நவமணி தங்கராஜ் இனைச் செயளாலர் தளபதி செபஸ்தியான்   தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கத்தின் பொருளாளர்  விக்னேஷ் மற்றும் கிளைச் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்


 






 ஆர்ப்பாட்டத்தில்...

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சங்க வியாபாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் 

ஞாயிறு, 10 நவம்பர், 2024

தேர்தலில் வெற்றி பெற்ற மத்திய வியாபார சங்க நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

thoothukudileaks 10-11-2024

Photo news by

Arunan journalist 

கடந்த வாரம் தேர்தலில் வெற்றி பெற்ற மத்திய வியாபார சங்க நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்தனர்.



இது பற்றிய செய்தியாவது:-

பொதுக்குழு கூட்டம் 

தூத்துக்குடி மாநகர வர்த்தகர்களின் மத்திய சங்க தேர்தல் மற்றும் வருடாந்திர பொதுக்குழுகூட்டம் 

10.11.2024 ஞாயிறு 4.00 மணிக்கு மத்திய சங்க அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

புதிய நிர்வாகிகளை வாழ்த்தி முன்னாள் அமைச்சர் சி த செல்லப்பாண்டியன் சால்வை அணிவித்தார்.



 இக் கூட்டத்தில் கடந்த 4-11-2024 அன்று தூத்துக்குடி மத்திய சங்க வியாபாரிகள் தேர்தல் நடைபெற்றது இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார் கள்


அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!!!

வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளை எம்.சொக்கலிங்கம் B.Sc.,B.L. 

தேர்தல் அலுவலர் / சங்க சட்ட ஆலோசகர் 


"மத்திய சங்க தலைவர், ஜவஹர் பொதுச்செயலாளர் தெர்மல் ராஜா மற்றும் பொருளாளர் விக்னேஷ் ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்ற தாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்"


இந்நிகழ்ச்சியில்... முன்னாள் தலைவர் விநாயகமூர்த்தி மற்றும் கிளை சங்க தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




சிறப்பு அழைப்பாளாராக முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



அதன் பின்னர் சங்க வரவு செலவு கணக்கு சங்க கட்டிடம் பத்திரம் ஆகியவற்றை முன்னாள் தலைவர் விநாயகமூர்த்தி புதியதாக தேர்வு செய்ய பட்ட நிர்வாகிகள் இடம் ஒப்படைத்தார்.

ஒப்படைப்பு 


சங்க கட்டிடம் மேல் மாடி எழுப்ப வேண்டுகோள்!!!

புதிய நிர்வாகிகளான தலைவர் செயலாளர் பொருளாளர் உங்களின் கடமையாக  நீங்கள் சங்க கட்டிடத்தில் மேல் மாடியில் கட்டிடம் கட்ட வேண்டும்  அதற்கான முயற்சியில் இப்போதிருந்தே ஈடுபடுங்கள் இதில் நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் தான் 9 வருடம் பதவியில் இருந்த போது என்னால் முடிந்ததை செய்து முடித்தேன் என கேட்டுக் கொண்டார்.

மாநில தலைவர் வெள்ளையன் மறைவுக்குப் மவுன அஞ்சலி





பொதுக்குழு கூட்டம் ஆரம்பித்ததும்

முன்னதாக தன்னிநிகரில்லா மாநில வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் 

வெள்ளையன் மறைவுக்குப் மூன்று நிமிடங்கள் அனைவரும் எழுந்து மவுன அஞ்சலி செலுத்தினர்.

நன்றி தெரிவிப்பு 

கூட்டம் நிறைவில் நெகிழ்ச்சி உடன் மத்திய வியாபாரிகள் சங்கம் பொது செயலாளர் தெர்மல் ராஜா பொதுக்குழு கூட்டத்தில்  கலந்து கொண்ட கிளை சங்க நிர்வாகிகள் வியாபார சங்க உறவு கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.












திங்கள், 4 நவம்பர், 2024

பரபரப்பாக நடைபெற்ற தூத்துக்குடியில் வியாபாரிகள் சங்கம் தேர்தல் பொது செயலாளராக தெர்மல்நகர் ஐக்கிய வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் தெர்மல் ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்

தூத்துக்குடி லீக்ஸ்

5-11-2024 

 photo news by

Arunan journalist 

தூத்துக்குடியில் உள்ள 60  வியாபாரிகள் சங்கங்கள் கொண்ட ஒருங்கிணைத்த சங்கமான தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க நிர்வாகிகள் தேர்தல் நடத்திட நேற்று 04.11.24 காலை 10 மணிமுதல் மதியம் வரை சட்ட ஆலோசகர் . M. சொக்கலிங்கம்  அறிவிப்பு கொடுத்திருந்தார்.




பரபரப்பு!!!

தூத்துக்குடியில் வியாபாரிகள் நிர்வாகிகள் அப் பகுதியில் வர தொடங்கியதும் ...

காலை 9.30 மணிமுதல் மணி நகரில் உள்ள தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம் பரபரப்பு ஏற்பட்டது.



இரு அணிகளும் மோதல்!!!

இரண்டு அணிகளாக வந்து தேர்தல் போட்டியில் களம் இறங்கினார் கள் இரு நாட்களாக முன்பாக வியாபாரிகள் மத்தியில்  ஆதரவு கேட்டு ஒரு வித பரபரப்பு உருவாகியது.

 

 இதில் தெர்மல் ராஜா  அணியான  வெற்றி அணியின் தலைவராக . ஜவஹர் , பொது செயலாளராக தெர்மல் ராஜா பொருளாளராக விக்னேஷ் 

தூத்துக்குடியில் 48 கிளை சங்கங்கள் வேட்பு மனு தாக்கல்!!!

தெர்மல் ராஜா  அணி இவர்களுக்கு ஆதரவான  48 கிளை சங்க நிர்வாகிகளும் பெரும் திரளாக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்கள்.

அமைதியாக வாபஸ் 

 ஏற்கனவே பொறுப்பில் இருக்கும் விநாயகமூர்த்தி  அணி அதனை பார்த்ததும் அமைதியாக மனு தாக்கல் செய்யாமல் அங்கிருந்து சென்றனர்.   


வேட்பு மனு தாக்கல் செய்யும் நாளான நேற்று வேறு யாரும் மனு தாக்கல் செய்யாத காரணத்தால்...

தலைவர் 


தலைவர் ஜவஹர் 

 புதிய தலைவராக பாளை ரோடு முனிசிபல் காம்ப்ளெக்ஸ் 

சங்க செயலாளர் ஜவஹர் 


செயலாளர் தெர்மல் ராஜா 


செயலாளர் 

தெர்மல் ராஜா 

 பொது செயலாளராக  தெர்மல்நகர் ஐக்கிய வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் தெர்மல் ராஜா 

பொருளாளர் விக்னேஷ் 



பொருளாளர் விக்னேஷ் 

  பொருளாளராக அண்ணா பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் விக்னேஷ்  போட்டியின்றி தேர்ந்தெடுக்க பட்டார்கள். 



இவர்களுக்கு அனைத்து கிளை சங்க நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்தார்கள். 

தேர்தல் சட்ட ஆலோசகர் சொக்கலிங்கம் 


தேர்வு பெற்ற நிர்வாகிகள் அனைவருக்கும்  தூத்துக்குடி லீக்ஸ் சார்பில் அவர்களின் மக்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்!!! 



வியாழன், 24 அக்டோபர், 2024

30 ஆயிரம் கொடுத்து மூன்று கிடா ஆடுகளை வாங்கிய அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடி அருகே புதிதாக ஆடு சந்தை ஆரம்பம்

 ▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃

24--10-2024  

photo news 

by sunmugasunthram Reporter 


தூத்துக்குடி மாவட்டத்தில் ஆடு விற்பனை செய்யும் சந்தைகள்  எட்டையாபுரம்,   மற்றும் புதியம்புத்தூர், நாசரேத், ஏரல் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. 




தூத்துக்குடி, விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் ஆடுகள் வாங்குவதற்கு எட்டையாபுரம் மற்றும் புதியம்புத்தூர் செல்கின்றன.???


புதிய ஆட்டு சந்தை !!!

     தற்போது ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி இசிஆர் சாலை கோமஸ்புரம் பகுதியில் புதிதாக ஆடு ,நாட்டுகோழி, விற்பனை சந்தை உருவாக்கப்பட்டது .

அமைச்சர் கீதா ஜீவன்!!!

புதியதாக உருவான ஆட்டு சந்தையை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி வைத்து சந்தையை துவக்கி வைத்தார்.

மூன்று கிடா ஆடுகளை வாங்கிய அமைச்சர் கீதா ஜீவன்!!!!

 இதில் தொடர்ந்து ஆட்டு வியாபாரிகளை ஊக்கப்படுத்தும் விதமாக சந்தையில் ரூ 8500, ரூ.10,500, ரூ. 11,000 ஆகிய 3 கிடா ஆடுகளை 30 ஆயிரம் விலைக்கு ஆடுகளை வாங்கினார் அமைச்சர் கீதாஜீவன் . 



ஆட்டுச் சந்தையின் திறப்பு விழாவிற்கு தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலைமை வகித்தார். 


ஆடு இறைச்சி வியாபாரிகள் கருத்து !!!

புதன் மற்றும் வெள்ளிகிழமை வாரத்தில் இரண்டு நாட்கள் செயல் படும் 

சுமார் ஒன்றரை ஏக்கரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சந்தை வாரந்தோறும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதன் மூலம் தூத்துக்குடி விளாத்திகுளம் குளத்தூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் நீண்ட தூரம் பயணம் செய்தும் வாடகைக்கு வண்டி பிடித்து பிற இடங்களுக்கு கொண்டு செல்லக்கூடிய கால சூழல் பண விரையம் ஆகியவை தவிர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது என ஆட்டு வியாபாரிகள் தெரிவித்தனர்.


 முதல் நாளில் ஏராளமான வியாபாரிகள் ஆடு, நாட்டுகோழி, சேவல் போன்றவற்றை சந்தைக்கு கொண்டு வந்து விற்பனையில் ஈடுபட்டனர். 

 

ஆட்டுச் சந்தையின் உரிமையாளர் அம்பாசங்கர் !!!!

 தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் மட்டுமின்றி திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப காரியங்களுக்கு ஆட்டு இறைச்சி வாங்குவோர் நீண்ட தூரம் செல்லக்கூடிய சூழல் தவிர்க்கப்படும் எனவும் இச்சந்தையில் விரைவில் ஆட்டு வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர்கள் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவுள்ளது என ஆட்டுச் சந்தையின் உரிமையாளர் அம்பாசங்கர் தெரிவித்தார்.

இவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் பழனி, கவுன்சிலர் தெய்வேந்திரன், சுற்றுச்சூழல் அணி துணைத்தலைவர் வினோத், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மாநகர இறைச்சி கடை உாிமையாளர்கள் சங்க தலைவர் வேல்சாமி, செயலாளர் பொன்ராஜ், திமுக தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் மாாிச்செல்வம், மாணவரணி ரமேஷ், கணபதி நகா் கார்த்திசன், கிளைச்செயலாளர்கள் உலகநாதன், ராமசந்திரன், ஆசைதம்பி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.