Tamil Nadu updates,
Photo news by Arunan journalist
தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாநகராட்சி ஆனையர் மதுபாலன் துனை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .
இன்று 27-2-2025 நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி மாநகராட்சி 2025-26 நிதிநிலை அறிக்கை – மக்கள் நலத்திற்கான புதிய திட்டங்கள் அறிவிப்பு செய்தார்.
மாமன்ற கூட்டத்தில் 6 வது தீர்மானத்தில...
6) (அ) தூத்துக்குடி மாநகராட்சி கட்டிட அனுமதி வழங்க வசூலிக்கப்படும் கட்டண விலைப்பட்டியல் (Schedule of rate) மாமன்ற தீர்மான எண் 496 நாள் 31.07.2024ன்படி தற்போது குடியிருப்பு கட்டிடத்திற்கு 1 சமீக்கு ரூ.850/-ம், குடியிருப்பு அல்லாத கட்டிடத்திற்கு 1 செமீக்கு ரூ.1,100/-ம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
வைப்புத் தொகை போன்ற இதர கட்டணங்கள் மாமன்ற தீர்மான 97 நாள் 07.03.2019ன்படி வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கபசான்றளிப்பு வரையறைக்குட்படாத குடியிருப்பு () குடியிருப்பு அல்லாத கட்டுமானங்களுக்கு ஒற்றைச்சாளா இணைய முகப்பில் (SINGLE WINDOW PORTAL கட்டிட அனுமதி வழங்குவதற்கு செலுத்தவேண்டிய ஒருங்கிணைந்த கட்டணங்களை நிர்ணயம் செய்து
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கள் (குறி1) துறை அரசாணை (டம் எண் 72 நாள் 05.02.2025ல் உத்தரவிடப்பட்டுள்ளது.
இஃது குறித்து தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக கொராடா கவுன்சிலர் மந்திரமூர்த்தி சொத்து வரி கூடுதல் குறித்து கேள்வி எழுப்பினார்
இஃது குறித்து தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி விளக்கம் அளித்தார்
வாட்ஸ் அப் ல வரும் தேவையில்லாத பதிவுகளை பொது மக்கள் நம்ப வேண்டாம் என்றார்.
தூத்துக்குடி மாநகராட்சி 2025-26 நிதிநிலை அறிக்கை – மக்கள் நலத்திற்கான புதிய திட்டங்கள் அறிவிப்பு
தூத்துக்குடி மாநகராட்சி 2025-26ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டார். இதில் பொது பயன்பாட்டு திட்டங்கள், குடிநீர் விநியோகம், சுகாதாரம், கல்வி, வருவாய், நகரமுறைத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
பொதுமக்கள் வசதிக்கான புதிய திட்டங்கள்
மகளிர் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வடக்கு மண்டலத்தில் புதிய மகளிர் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இளைஞர்களுக்காக நகரின் 5 இடங்களில் சிறிய விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்படும். தனசேகர் நகர் பகுதியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மைய நூலகம் கட்ட திட்டம் தயார் நிலையில் உள்ளது.
நகரில் பாரம்பரிய உணவுகளை ஊக்குவிக்க Food Street அமைக்கப்படும். மேலும், 1.2 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட சூரிய ஒளி தகடுகள் நிறுவப்பட்டு, மாநகரத்திற்கு தேவையான மின்சாரத்தை சுயமாக உற்பத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.
மழை நீரை சேமிக்க நகரின் முக்கிய 4 குளங்கள் மறுசீரமைக்கப்படுவதுடன், நடைபாதைகளும் அமைக்கப்படும். போதைப்பொருள் அடிமையிலிருந்து மீட்பதற்காக போதை மறுவாழ்வு மையம் தொடங்கப்பட உள்ளது.
தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 20 இடங்களில் நகர்ப்புற குறுங்காடுகள் வளர்க்கப்படும்.
குடிநீர் விநியோகம் & சுகாதாரம்
மாநகரின் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர் தொட்டிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளன. மேலும், 9 வார்டுகளில் 24 மணி நேர குடிநீர் விநியோகம் செயல்படுத்தப்படும்.
மக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த, 2023-ஆம் ஆண்டு பிறந்த குழந்தைகளுக்கு செவித் திறன் பரிசோதனை வழங்கப்படும்.
நகரின் நிதி ஆதாரத்தில் பின்தங்கிய பகுதிகளில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் லூர்தம்மாள்புரம் நகர்ப்புற சுகாதார நிலையம் மேம்படுத்தப்படும்.
மாநகரத்தில் தூய்மையை உறுதி செய்ய மூன்று நுண் உர செயலாக்க மையங்கள் (MCC) மற்றும் ஒரு மறுசுழற்சி மையம் (RRC) அமைக்கப்படும். தெரு நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த உரிய அறுவை சிகிச்சை செய்யும் வசதிகள் மேம்படுத்தப்படும்.
வசதி கட்டமைப்பு & வருவாய் சேகரிப்பு
நகரின் வருவாய் சேகரிப்பை அதிகரிக்க, நான்கு புதிய வரி வசூல் மையங்கள் திறக்கப்பட உள்ளன. குடிநீர் கட்டணம் மற்றும் சொத்து வரி தொடர்பான பெயர் மாற்றங்களை ஒரே விண்ணப்பத்தின் மூலம் எளிதாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி வாகன நிறுத்தங்களின் கட்டண வசதி முழுமையாக மின்னணு முறையில் செயல்படுத்தப்படும்.
கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாடு
மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசும் திறனை வளர்க்க சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். மேலும், நகரின் மூன்று பள்ளிகளில் கூடுதல் கழிப்பறைகள் கட்ட திட்டம் உள்ளது.
இளம் குழந்தைகளின் வளர்ச்சியை மேம்படுத்த, 9 புதிய அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்படும். இளைஞர்களின் உடல்நலத்தை மேம்படுத்த சிறிய அளவிலான செயற்கை புல் கால்பந்து மைதானம் (Turf) அமைக்கப்பட உள்ளது.
மற்ற முக்கிய அறிவிப்புகள்
மாநகரில் அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்க புதிய பயிற்சி மையம் தொடங்கப்படும்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனை அருகே, நோயாளிகளை உறவினர்கள் பார்வையிடும் வசதிக்காக காத்திருப்பு அறைகள் உருவாக்கப்படும்.
தொழில் முனைவோருக்கு தமிழக அரசின் Start-up Agency மூலம் தொழில் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி 2025-26 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் நகரின் பொது வசதிகளை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. மக்கள் பயன்பெறும் வகையில் விரைவில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக