புதன், 16 பிப்ரவரி, 2022

பீஹாரிலிருந்து கையில் ஒரு டிபன் பாக்ஸ், ஒரு படுக்கையோடு வந்தேன் .தூத்துக்குடி ஸ்டெர்லைட் வேதாந்தா அனில் அகர்வால் டுவிட்டரில்

 வணிகத்தில் பெரும் வெற்றியை அடைந்த சிலர், எப்போதாவது தங்களது ஆரம்பகால வாழ்க்கை நிலையை பொது வெளியில் பகிர்ந்து கொள்வதுண்டு. அந்த வரிசையில் ...

 இப்போது,

தூத்துக்குடி ஸ்டெர்லைட்'வேதாந்தா' குழுமத்தின் தலைவர் அனில் அகர்வாலும் சேர்ந்துள்ளார்.



இன்று, அனில் அகர்வால் உலகறிந்த 

ஒரு பெரும் தொழிலதிபர்.

ஆனால், அவர் மும்பைக்கு, கையில் ஒரு படுக்கை, ஒரு டிபன்பாக்ஸ் உடன் மட்டுமே வந்து இறங்கியவர்.


அண்மையில் டுவிட்டரில், அவர் முதன்மும்பைக்கு  முதலாக அனில் அகர்வால் வந்த சம்பவத்தை  நினைவு கூர்ந்துள்ளார்.


தூத்துக்குடி ஸ்டெர்லைட் வேதாந்தா அனில் அகர்வால் டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:


லட்சக்கணக்கான மக்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை சோதித்து பார்க்க 

மும்பைக்கு வருகின்றனர். அப்படி வந்தவர் களில் நானும் ஒருவன்.


கையில் ஒரு டிபன் 4 பாக்ஸ், ஒரு படுக்கை, கண்களில் கனவு...

இவற்றுடன் நான் பீஹாரிலிருந்து கிளம்பிய நாள் எனக்கு நினைவிருக்கிறது. 

நான் 'விக்டோரியா டெர்மினஸ்' ரயில் நிலையத்திற்கு வந்தேன். அங்கே தான் முதல் முறையாக கறுப்பு மஞ்சள் வண்ணத்திலான டாக்சி, மாடி பஸ் போன்றவற்றை பார்த்தேன்.

இனவ எல்லாமே இதற்கு முன் நான் சினிமாவில் தான் பார்த்திருந்தேன்.


நான்இளைஞர்களை கடினமாக உழைக்கவும், இலக்குகளை எட்டவும் ஊக்குவிக்கிறேன்.

இவ்வாறு அவர்கூறியுள்ளார்.

தூத்துக்குடியில். வேதாந்தா அனில் அகர்வால் ஸ்டோரி

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா -வின்  ஸ்டெர்லைட் ஆலை இயங்கிவந்ததது.

தூத்துக்குடி பொது மக்கள் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதில் துப்பாக்கி சூடு  13பேர் பின்பு 2 பேர் துப்பாக்கி சூட்டில் இறந்து போனார்கள் தூத்துக்குடியில் அனைத்து இடங்களிலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடும் கொந்தளிப்பு  இதனால் தமிழக அரசு 2018 மே 28-ல் ஸ்டெர்லைட் ஆலையை பூட்டி சீல் வைத்து விட்டது.

தூத்துக்குடியில்  2018-ல் மூடிய ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கடந்த 4 வருடமாக வேதாந்தா ஸ்டெர்லைட் அணில் அகர்வால் முயற்சித்து வருகிறார்.

அனில் அகர்வால்,

'வேதாந்தா ரிசோசர்ஸ்'நிறுவனத்தை 1970ல்துவக்கினார். இது இப்போது லண்டனைதலைமையிடமாக கொண்ட உலகளாவிய நிறுவனமாக உயர்ந்துள்ளது.


இதன் ஆண்டு வருவாய், மட்டும் 2021

நிலவரப்படி, கிட்டத்தட்ட ரூபாய்88 ஆயிரம் கோடியாம்? அப்படியானால் ஒவ்வொரு வருடமும் அடேங்கப்பா தலை சுற்றுகிறது.

தூத்துக்குடியில் வேதாந்தா ஸ்டெர்லைட் அனில் அகர்வால் ஆலை மூடியதால் கஷ்டப்படுவதாகவும் ... திறந்தா தான் சாப்பாடு என தூத்துக்குடியில் ரீல் விட்டு  சிலர் புலம்பி வருவது தான் சிரிப்பை வரவழைக்கிறது. என்கிறார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக