வியாழன், 14 அக்டோபர், 2021

குலசேகரப்பட்டடினம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் தசரா பத்தாம் திருவிழா!! பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் கோவிலுக்கு வர அனுமதி இல்லை!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழுவதும் தளர்வுகளுடன் கூடிய 144 தடைஉத்தரவு  31.10.2021 வரை நீட்டிப்பு செய்யப்பட்டு அமலில் உள்ளதால் மாவட்ட ஆட்சியர்  உத்தரவுப்படி ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் தசரா பத்தாம் திருவிழா நாளான 15.10.2021 முதல் 17.10.2021 ஆகிய 3 நாட்கள் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் கோவிலுக்கு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆகவே  மேற்படி 3 நாட்களும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வர வேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார்.




மேலும் நாளை (15.10.2021) நடைபெற உள்ள பத்தாம் திருவிழா சூரசம்ஹாரம் சென்ற ஆண்டு போல குலசேகரப்பட்டினம் ஸ்ரீமுத்தாரம்மன் கோவில் வளாகத்திலேயே நடைபெறவுள்ளது, 


கடற்கரையில் நடைபெறாது எனவே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடற்கரை பகுதிகளில் யாருக்கும் அனுமதி கிடையாது,



மேலும் குலசை தசரா திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் உள்ளூர் தொலைக்காட்சி  மற்றும் பிரபல தொலைக்காட்சி மற்றும்  YouTube லும் நேரடியாக ஒளிப்பரப்பபடும்.


இதனை மீறி வரும் பக்தர்கள் சோதனை சாவடிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள். 



ஆகவே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு தந்து 15.10.2021 முதல் 17.10.2021 ஆகிய 3 நாட்கள் கோவிலுக்கு வராமல் தங்கள் ஊரிலேயே பக்தர்கள் காப்பை கழட்டி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தூத்துக்குடி லீக்ஸ் 14.10.2021



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக