தூத்துக்குடி மாவட்ட காவல் கட்டுபாட்டு அறை வாட்ஸ்அப் எண்ணிற்கு காவல்துறையினரை ஆபாசமாக திட்டியும், தமிழ்நாடு காவல்துறை சின்னத்தில் உள்ள தேசியகொடியில் ஆபாசமான படங்களை சித்திரித்தும், காவல் அலுவலகத்தில் குண்டு வெடிக்கும் என்று மிரட்டியும் தொடர்ந்து செய்தி அனுப்பியவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட மணிகண்டன் |
தூத்துக்குடி மாவட்ட காவல் கட்டுபாட்டு அறை வாட்ஸ்அப் எண்ணாண 9514144100 ஹலோ போலீஸ் எண்ணிற்கு கடந்த 06.03.2022 அன்று 48729759460 மற்றும் 4859086761 ஆகிய எண்களிலிருந்து காவல்துறையினரை ஆபாசமாக திட்டியும், தமிழ்நாடு காவல்துறை சின்னத்தில் உள்ள தேசியகொடி மற்றும் அசோக சக்கரத்தில் ஆபாச படத்தை வைத்து சித்தரித்தும், காவல் அலுவலகத்தில் குண்டு வெடிக்கும் என்று மிரட்டியும் தொடர்ந்து செய்தி வருவதாக மாவட்ட கட்டுபாட்டு அறையில் பணிபுரியும் முதல் நிலை காவலர் ராஜலிங்கம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புகார் அளித்தார்.
அவரது புகாரின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் சைபர் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேற்படி மாவட்ட காவல் கட்டுபாட்டு அறை வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆபாசமாக செய்தி அனுப்பியது தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த இளங்கோவன் மகன் மணிகண்டன் (31) என்பதை கண்டு பிடித்தனர்..
மேலும் விசாரணையில் மணிகண்டன் இதே போன்று கோயம்புத்தூர் மற்றும் மதுரை உட்பட 4 மாவட்ட கட்டுபாட்டு அறை வாட்ஸ்அப் எண்களுக்கு காவல்துறையினரை ஆபாசமாக திட்டி செய்தி அனுப்பியுள்ளதும் தெரியவந்தது.
உடனே மேற்படி சைபர் குற்ற பிரிவு போலீசார் மணிகண்டனை கைது செய்து எதற்காக இப்படி செய்தார் என விசாரித்து வருகின்றனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக