தூத்துக்குடி மாவட்டம்: 23.03.2022
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி நடராஜபுரம் பகுதியை சேர்ந்த வேலுசாமி மகன் வடிவேல் (41) என்பவர் கோவில்பட்டி ஜமீன்பேட்டை தெருவில் சொந்தமாக தையல்கடை வைத்துள்ளார். இவர் கடந்த 20.03.2022 அன்று தனது கடை முன்பு நிறுத்தியிருந்த தனது இருசக்கர வாகனம் திருடுபோயுள்ளது.
இதனையடுத்து வடிவேல் அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கோவில்பட்டி தெற்குபுதுக்கிராமம் பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் நாராயணசாமி (48) என்பவர் மேற்படி வடிவேலின் இருசக்கரவாகனத்தை திருடியது தெரியவந்தது. மேலும் நாராயணசாமியிடம் நடத்திய விசாரணையில் கடந்த 03.03.2022 அன்று கோவில்பட்டி இலுப்பையூரணி கடலையூர் ரோடு பகுதியை சேர்ந்த கந்தவேலு மகன் முருகையா (38) என்பவரது இருசக்கர வாகனத்தையும்; திருடியது விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் காந்தி வழக்குப்பதிவு செய்து எதிரி நாராயணசாமி என்பவரை கைது செய்தார், மேலும் அவரிடமிருந்து திருடிய ரூபாய் 34,000/- மதிப்பிலான 2 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக