தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அதிமுகவின் மூத்த தொண்டர்களுக்கு விருது வழங்கி கெளரவிப்பு .. அதிமுகவை இன்றும் உயர்த்தி பிடித்து வருபவர்கள் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் ரசிகர்கள் தான் தூத்துக்குடி அதிமுக மா.செ எஸ்.பி சண்முகநாதன் பெருமிதம்.
இது பற்றிய செய்தியாவது:-
புரட்சி தலைவர் எம் ஜி ஆர் ரசிகராகவும் பின்பு அ தி மு க - கட்சி தோன்றியதும் 1972ல் இருந்து ஒரே கட்சியில் இருந்து வரும் அதிமுகவின் மூத்த தொண்டர்களை கௌரவித்து விருது வழங்கும் விழா தூத்துக்குடியில் கனி கூட்டரங்கில் நேற்று (22 -03-2022) நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட செயலாளரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் அதிமுக மூன்னோடிகளான மூத்த தொண்டர்களை மேடைக்கு வரவழைத்து அவர்களுக்கு விருது வழங்கி கெளரவித்தார்.
முதற்கட்டமாக கடந்த 26-12-2021 அன்று கனி கூட்டரங்கில் மூத்த தொண்டர்களுக்கு மா.செ எஸ்.பி.சண்முகநாதன் விருது வழங்கினார்.
தற்போது அதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்டமாக நேற்று 22-03-2022
அ தி மு க மூத்த தொண்டர்களுக்கு விருது மற்றும் அதிமுக பார்டர் வைத்த வேட்டி சட்டை வழங்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அரிசி பை சேலை நினைவு பரிசு எவர்சில்வர் தட்டு போன்றவைகளை வழங்கப்பட்டது.
அதிமுகவின் மூத்த தொண்டர்களுக்கு விருது வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் மா.செ எஸ்.பி.சண்முகநாதன் பேசியதாவது:-
அதிமுகவை இன்றும் உயர்த்தி பிடித்து வருபவர்கள் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் ரசிகர்கள் தான்.
விரைவில் தூத்துக்குடியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு சிலை அமைப்போம் அதற்கான ஏற்பாடுகளை செய்வோம் என்றார். அடுத்து அதிமுக மூத்த தொண்டர்களை இங்கு வரவழைத்து இன்று இரண்டாவது தடவை தொடர்ச்சியாக விருது நாம் வழங்கிறோம்.
இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த எம்.ஜி.ஆர் மன்றம் சத்யா இலட்சுமணன் - ஜ பாராட்டுகிறேன் என்றார். மா.செ எஸ்.பி சண்முகநாதன்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக நிர்வாகிகள்
நெல்லை தூத்துக்குடி ஒருங்கினைந்த மாவட்ட எம்.ஜிஆர்.மன்ற முன்னாள் பொறுப்பாளர் .மு .பாலகிருஷ்ணன், டாக்டர் சாமுவேல், முன்னாள் .மா.செ.தாமோதரன், மத்திய கூட்டுறவு சங்க தலைவர் R.சுதாகர், ஆறுமுகநேரி அமிர்தராஜ், ஏசா துரை டாக்ராஜா, ஜெய்கணேஷ், பி.சி மணி, மிக்கேல், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ், பால ஜெயம், சகாயராஜ் குமரவேல், பொன்னம்பலம், விஜயராகவன், பால்ராஜ், மற்றும் அதிமுக கட்சியினர் ஏராளமானார் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சி ஏற்பாடு எம் ஜி ஆர் மன்றம் சத்யா இலட்சுமணன் சிறப்பாக செய்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக