தூத்துக்குடி லீக்ஸ் :- 12-05.2022
நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தரமான பனைவெல்லம் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பனைபொருட்கள் தயாரிப்பது தொடர்பான பயிற்சி கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி
நிலையத்தின் வேளாண் வணிக தொழில் முனைவோர் மேம்பாட்டு மையகட்டிடத்தில் வைத்து 11.05.2022 முதல் 13.05.2022 முடிய மூன்று தினங்கள்
நடைபெறுகிறது.
தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியத்தின் கட்டுப்பாட்டின்
கீழ் செயல்படும் திருநெல்வேலி மாவட்ட பனை பொருட்கள் கூட்டுறவு
சம்மேளனம் தூத்துக்குடி திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மூன்று
மாவட்டங்களை உள்ளடக்கிய கூட்டுறவு நிறுவனமாகும்.
இதில் 95 ஆரம்ப
பனைவெல்ல கூட்டுறவு சங்கங்கள் உறுப்பினர்களாக உள்ளது. இதில்
தூத்துக்குடி மாவட்டத்தில் 46 பனைவெல்ல கூட்டுறவு சங்கங்கள் உள்ளது.
அதில் 14304 தனிநபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். சம்மேளனத்தால்
ஆண்டு ஒன்றிற்கு மூன்று கோடியே அறுபத்து ஒன்பது லட்சம் வணிகம்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2021-2022 ஆண்டு வேளாண்மை மற்றும்
உழவர் நலத்துறையின் பனை மேம்பாட்டு இயக்கம் என்ற அறிவிப்பில் ஒரு
கூறான பனைவெல்லம் உற்பத்தி தொடர்பான நவீன தொழில் நுட்பத்தை
பயன்படுத்தி தரமான பனைவெல்லம் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட
பனைபொருட்கள் தயாரிப்பது தொடர்பான பயிற்சியின் ஒரு பகுதியாக
பட்டறிவு பயண பயிற்சி கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி
நிலையத்தின் வேளாண் வணிக தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய
கட்டிடத்தில் வைத்து 11.05.2022 முதல் 13.05.2022 முடிய மூன்று தினங்கள்
நடைபெற உள்ளது.
முதல் நாளான 11.05.2022 அன்று பயிற்சியானது
கிள்ளிக்குளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின்
முதல்வர் முனைவர் க.இறைவன் அருட்கனி அய்யநாதன்
துவக்கி வைக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின்
வேளாண் வணிக தொழில் முனைவோர் மேம்பாட்டு மையமானது பதநீர்
வடிகட்டி தொழில் நுட்பம் மூலம் பதநீரின் ஆயுள் காலத்தை 30 நாட்கள்
வரை நீடிக்க வைக்கும் இயந்திரத்தை கொண்டுள்ளது.
மேலும் பதநீரில்
இருந்து சுகாதாரமான சுத்தமான பனைவெல்லம் தயார் செய்தல்,
பனங்கற்கண்டு தயார் செய்தல், பனம் பாகு தயார் செய்தல்,
பனங்கிழங்கிலிருந்து மாவு தயார் செய்தல், பனம் பழத்திலிருந்து பனம்
பழச்சாறு தயார் செய்தல், ஆகியவற்றிற்கான நவீன இயந்திரங்களையும்,
தயார் செய்யப்பட்ட பொருட்களை பாதுகாத்திட குளிர்சாதன
நிலையத்தினையும் கொண்டுள்ளது. மிகச்சிறந்த உட்கட்டமைப்பு
வசதிகளை கொண்டுள்ளது.
இம்மையத்தில் 50 பனைத் தொழிலாளர்கள்
நவீன முறையில் இயந்திரங்கள் மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட
பனைபொருட்கள் தயாரிக்கும் பயிற்சியினை பெற்றனர்.
இப்பயிற்சி மூலம்
பனைத் தொழில் மேம்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில் கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி
நிலையத்தை சார்ந்த பேராசிரியர்கள் முனைவர் ஏ.ப்பூலா,
முனைவர்.ரவீந்திரன', முனைவர். சபரிநாதன், கிள்ளிக்குளம் வேளாண்
தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தின் தலைமை செயல் அதிகாரி
ஜீவிதா மற்றும் தூத்துக்குடி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்
நிறுவனத்தின் உதவி இயக்குநர் ஜெரினா பப்பி. இப்பயிற்சிக்கு
திருநெல்வேலி மாவட்ட பனை பொருட்கள் கூட்டுறவு சம்மேளனம்
மேலாண்மை இயக்குநர் மு.பாலசுப்பிரமணியன் ஏற்பாடு
செய்தார்.
இந்நிகழ்ச்சியில் முத்துக்குமார். கற்பகவிநாயகம்,
அரிகிருஷ்ணன், தங்க மாரியப்பன், பிரதீப், முத்துக்கிருஷ்ணன்.
அருண்குமார். செல்வராஜ் பாலகிருஷ்ணன், ஆகியோர் கலந்து
கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தூத்துக்குடி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக