வியாழன், 4 ஜூலை, 2024

நிருபருக்கு கொலை மிரட்டல்தூத்துக்குடி பியர்ல்சிட்டி பத்திரிக்கையாளர் சங்கம் கண்டன அறிக்கை!!!

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

4-6-2024 photo news 

by Arunan journalist 

நியூஸ் 18 நிருபருக்கு கொலை மிரட்டல் விடுத்த  அரசியல்வாதி& அதிகாரி களுக்கு தூத்துக்குடி பியர்ல்சிட்டி பத்திரிக்கையாளர் சங்கம் கண்டன அறிக்கை விடுத்துள்ளார் கள்!!! 




இதுபற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி பியர்ல்சிட்டி பத்திரிக்கையாளர் சங்கம்கண்டன அறிக்கை:-

தூத்துக்குடி மாவட்டம் 

கோவில்பட்டி நியூஸ்18  செய்தியாளர் மகேஸ்வரனுக்கு கொலை மிரட்டல் விடுத்த டீக்கடை உரிமையாளர்கள் மற்றும் துணை போன அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பியர்ல்சிட்டி பத்திரிக்கையாளர் சங்கம் வலியுறுத்துகிறது.


கடந்த புதன்கிழமை ஜுலை 3, அன்று 

அதிகாரிகள் முன்னிலையில் கோவில்பட்டி இளையரசனேந்தல்  சாலையில் உள்ள ரயில்வே பாலம் அருகில் சர்வீஸ் சாலை கட்டமைப்பிற்காக ஆக்கிரமிப்புகளை அகற்ற அளவீடு செய்த போது ஏ1 டீக்கடை உரிமையாளர் கணேசன் மற்றும் அவரது சகோதரர் சரவணன் ஆகியோர் செய்தியாளர் மகேஸ்வரனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள்.


 மேலும் கோவில்பட்டி நகராட்சி TPI கட்டுமான பிரிவு ஆய்வாளர் கிருஷ்ண குமார் காவல் சார்பு ஆய்வாளர் வேல்பாண்டியன் முன்னிலையில் பத்திரிகையாளர்களை பார்த்து...


 "யார் ரோட்டை ஆக்கிரமிப்பு செய்தால் பத்திரிக்கைகாரனுக்கு என்ன இவர்களை எல்லாம் ரோட்டில் நடமாட விடுவதே தப்பு என்று" தரை குறைவாக பேசியுள்ளார். சார்பு ஆய்வாளர் அவர்களும் தடுக்காமல் இதனை வேடிக்கை பார்த்துள்ளார்.???


இவ்வாறான.... பத்திரிகையாளர் விரோத போக்கை பியர்ல் சிட்டி பத்திரிக்கையாளர் சங்கம் கண்டிக்கிறது
.


 பத்திரிகையாளருக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்து தரக்குறைவாக பேசியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, பத்திரிக்கையாளர்கள் சுதந்திரமாக செய்திகள் சேகரிக்க பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம்

இவண்

பியர்ல்சிட்டி பத்திரிக்கையாளர் சங்கம்.

next...

வன்மையாக கண்டிக்கிறோம்!!!

கோவில்பட்டியில் தொடர்ச்சியாக பொது மக்களின் கோரிக்கைகளை அரசுக்கு வெளிப்படுத்தியும், சட்ட விரோத செயல்களை உரிய ஆதாரத்துடன் வெளிச்சம் போட்டுக் காட்டி வருகின்றனர் .


இதனால் நியூஸ் 18 கோவில்பட்டி பகுதி செய்தியாளர் மகேஸ்வரன் -ஜ

கோவில்பட்டி நகராட்சி நகரமைப்பு கட்டமைப்பு ஆய்வாளர்

கிருஷ்ணகுமார் என்பவரின் தூண்டுதலின் பேரில்.. திமுக நிர்வாகி கணேசன் சரவணன் மற்றும் அடையாளம் காட்டக்கூடிய 10 நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.


 இதுகுறித்து சம்பவ இடத்தில் காவல்துறையிடம் முறையிட்டது மட்டுமின்றி முறையாக புகார் அளிக்கப்பட்டது.

திமுக நிர்வாகிக்கு ஆதரவாக புகார் வாபஸ் பெறசொல்லி காவல்துறை அதிகாரிகள் !

 சம்பந்தப்பட்ட நபர்கள் காணவில்லை என்று காவல்துறை முதலில் கூறியது ..?

அவர்கள் வெளிப்படையாக சுற்றியதை புகைப்படத்துடன் செய்தியாளர்கள் காவல்துறைக்கு தெரிவித்தோம்.!!!


 அப்போதும் நடவடிக்கை எடுக்கவில்லை.?

 இப்போது வாபஸ் பெறவில்லை என்றால் கவுண்டர் பெட்டிஷன் போட்டு வழக்கு போடுவோம் என்று காவல்துறை வெளிப்படையாக மிரட்டி வருகிறது !!!

இதை வன்மையாக கண்டிக்கிறோம் 

இப்படிக்கு... 

பத்திரிக்கையாளர்கள் கோவில்பட்டி

next...

சென்னை பிரஸ் கிளப் கடும் கண்டனம்!!!

நியூஸ் 18  தொலைக்காட்சி செய்தியாளர் மகேஸ்வரனுக்கு கொலை மிரட்டல் - சென்னை பிரஸ் கிளப் கண்டனம் - கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் கள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக