▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 26.06.2024
photo news
by arunan journalist
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் போதைப் பொருளுக்கு எதிராக கையெழுத்திடும் முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இடம் பாராட்டு பெறும் சில்ட்ரன்ஸ் பாரடைஸ் டிரஸ்டின் திட்ட இயக்குனர் நந்தினி |
இன்று (26.06.2024) போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் தூத்துக்குடி சில்ட்ரன்ஸ் பாரடைஸ் டிரஸ்ட் - குடிபோதை நோயாளிகள் மறுவாழ்வு மையம் சார்பாக ...
இன்று 26-6-2024 தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் வைத்து போதைப் பொருளுக்கு எதிராக கையெழுத்திடும் முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அருகில் மனநல மருத்துவர் சிவசைலம், |
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் கையெழுத்திட்டு போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
அவரை தொடர்ந்து தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) பொன்னரசு, தூத்துக்குடி மனநல மருத்துவர் சிவசைலம் மற்றும் காவல் ஆளிநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கையெழுத்திட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பேசுகையில்...
இன்று உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக பேரணி, கையெழுத்திடும் முகாம் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.
போதைப் பொருள் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் .
குண்டர் சட்டம் அல்லாமலேயே ஒரு வருடம் ஜாமீன் வழங்காமல் சிறையிலடைக்க சட்டத்தில் வழிவகை உண்டு.
அவ்வாறு ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருளை முற்றிலும் ஒழிப்பதற்காக பொதுமக்கள் தகவல் தருவதற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் செல்போன் 83000 14567 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்
தகவல் தருபவர்கள் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) பொன்னரசு, மனநல மருத்துவர் சிவசைலம், சில்ட்ரன்ஸ் பாரடைஸ் டிரஸ்டின் திட்ட இயக்குனர் நந்தினி மற்றும் மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ், உதவி ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக