வெள்ளி, 28 ஜூன், 2024

ஸ்பிக் எதிராக போராட தயாராகும் தூத்துக்குடி முத்தையா புரம் பொதுமக்கள்!!!

▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 29-6-2024 photo news 

by arunan journalist 

தூத்துக்குடியில் நில ஆக்ரமிப்பில் ஸ்பிக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது என அப் பகுதி பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் வியாபாரிகள் ஸ்பிக் ஆக்ரமிப்பு செய்துள்ள பகுதிகளை மீட்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் வலியுறுத்தி மக்கள் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர் கள்.



இது பற்றிய செய்தியாவது:-


தூத்துக்குடி மாநகராட்சி 59 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்பிக் நிர்வாகம்  முத்தையாபுரம் ஊரணி புறம்போக்கு நிலத்தினை ஆக்கிரமித்துள்ளது.

 இதை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கோரி முத்தையாபுரம் ஊரணி மீட்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது

 தூத்துக்குடி முத்தையாபுரம் மரியா மஹாலில் சமூக ஆர்வலர்களின் கூட்டம் நேற்று 28/06/2024 மாலை 8 மணி அளவில் நடைபெற்றது

அக் கூட்டத்தில்....

தூத்துக்குடி மாநகராட்சி வார்டு 59 க்கு உட்பட்ட முத்தையாபுரம் ஊரணி பகுதியை ஆக்கிரமித்துள்ள ஸ்பிக் நிர்வாகத்தை கண்டித்தும்..

 அந்த இடத்தை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு மைதானம் அமைத்து தரவேண்டியும்..

தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 M.சண்முகபுரம் ஊர் தலைவர் E.P.சக்திவேல் தலைமை தாங்கினார்..


கலந்து கொண்டவர்கள்!!!


 தெர்மல் ராஜா

 மத்திய வியாபாரிகள் சங்கம் இணை செயலாளர்


 பேச்சிமுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 


சேமா.சந்தனராஜ் 

தமிழர் விடியல் கட்சி  


மாரியப்பன் M.தங்கமாள்புரம் ஊர் தலைவர்... 


செந்தில் தங்கம்மாள்புரம் ஊர் நிர்வாகி


 கணேஷ் அய்யாதுரை முத்தையாபுரம் அம்மன் கோவில்  பொருளாளர்


  கென்னடி விடுதலை சிறுத்தைகள் கட்சி சூசை நகர்


 சின்ன தங்கம் ஸ்பிக் நகர் வியாபாரிகள் சங்கம் 


தவசி வேல் ஸ்பிக் நகர் வியாபாரிகள் சங்க தலைவர்


 வேல்முருகன் சவேரியார்புரம் வியாபாரிகள் சங்க தலைவர்


 மணிராஜ் முத்தையாபுரம் வியாபாரிகள் சங்க செயலாளர்


 அர்ஜுனன் ஸ்பிக் வியாபாரிகள் சங்க செயலாளர்


 பழனிமுத்து முத்தையாபுரம் அம்மன் கோவில் நிர்வாகி


 மாரிமுத்து சூசை நகர்


 அமுல்ராஜ் தங்கம்மாள்புரம் ஊர் செயலாளர்


 சுயம்பு துரை தொழிலதிபர்


 தங்க சேகர் முத்தையாபுரம்


 முனியசாமி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி


 கசாலி முத்தையாபுரம்


 அன்ன சேகர் ஸ்பிக் வியாபாரிகள் சங்கம்


 முருகேசன் ஆலோசகர் ஸ்பிக் வியாபாரிகள் சங்கம் 


ராஜபாண்டி 

வடக்கு தெரு


மற்றும் முத்தையாபுரம் பகுதி சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்....


கூட்டத்தில்... நிறைவேற்றப்பட்ட 

தீர்மானங்கள் ...


ஜாதி மத பேதமின்றி கட்சி வேறுபாடு இன்றி முத்தையாபுரம் பகுதி மக்களின் முன்னேற்றத்திற்காக முத்தையாபுரம் ஊரணி மீட்பு குழுவில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து போராடுவோம்...


 தூத்துக்குடி மாநகராட்சி 59 வது வார்டுக்கு உட்பட்ட ஸ்பிக் நிர்வாகம் ஆக்கிரமித்துள்ள முத்தையாபுரம் ஊரணி புறம்போக்கு நிலத்தினை பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கோரி இந்த தூத்துக்குடி முத்தையாபுரம் ஊரணி மீட்பு குழு ...


 தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதி பொதுமக்கள் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ஸ்பிக் நிர்வாகம்  ஆக்கிரமித்து உள்ள இடத்தை மீட்டு விளையாட்டு மைதானம் பூங்கா அமைக்க பாடு பட வேண்டும்...

ஸ்பிக் எதிராக மக்கள் போராட்டம் 


இது சம்பந்தமாக 

01/07/2024 அன்று காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முத்தையாபுரம் ஊரணி மீட்பு குழு கலந்து கொண்டு மனு கொடுப்பது...


அதன் பின் ஜனநாயக ரீதியாக போராடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.....


இவன்....

 முத்தையாபுரம் ஊரணி மீட்பு குழு....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக