சனி, 20 ஜூலை, 2024

நிலா சீ புட் ஆலையால் வெளிமாநில இளம்பெண்கள் உட்பட 30 பேர் அவசர சிகிச்சை மூன்று தனியார் மருத்துவமனையில் அனுமதி இரவு நேரத்தில் நடந்த வீபரீதம்

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

20-7-2024 photo news 

by Arunan journalist 

நிலா சீ புட் ஆலையால் வெளிமாநில இளம்பெண்கள் உட்பட 30 பேர் அவசர சிகிச்சை  மூன்று தனியார் மருத்துவமனையில்  அனுமதி 

இரவு நேரத்தில் 

அமோனியா கசிவு  புகை கிளம்பியது தான் காரணமா???



இது பற்றிய செய்தியாவது;-

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை கில்பன் பெயர் மாறி அதே இடத்தில் விவி டைட்டானியம், ஸ்பிக் போன்ற தொழிற்சாலை களில் அனு தினமும் கோடிக்கணக்கில் பணம் புரள்கிறது


ஆனால்? தூத்துக்குடியில் வாழும் இங்கு ள்ள மக்கள் உயிர் உடல் நலன் மண் நிலம் சுவாசிக்கும் காற்று சம்பந்தப்பட்ட விஷயங்களில் அக்கறை செலுத்தி வருகின்றார்களா ??  தெளிவு படுத்த வேண்டும்.


சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு வீதிமீறல் குறித்து ஆய்வு செய்கிறார்களா ? 

நடவடிக்கை எடுக்கிறார்களா?? 

விபத்து பிரச்சினையின் போது மட்டுமே வெளி வருகிறார்கள்.


 ஏனெனில்?

மக்கள் நலன் காக்கும் அரசியல் வாதிகள் சமுக ஆர்வலர்கள் பொதுமக்கள் ஏன் அவ்வவ்போது கேள்வி எழுப்பி  வீதிக்கு வந்து போராடுகிறார்கள் பாதிப்பு ஏற்படாமல் ஏன் வரப் போகிறார்கள் ?



தூத்துக்குடி 

நிலா சீ புட் !!!

இது போன்று தான் (19-7-2024)நேற்று இரவு 11 மணியளவில் தூத்துக்குடி புதூர் பாண்டியா புரம் பகுதியில் இயங்கும் கடல் மீன்கள் உணவு பதனிடும் நிலா சீ புட்  

 வெளிநாட்டு ஏற்றுமதி செய்யும் ஆலையில் தீடீர் என அமோனியா வாயுக்கள் கசிவு ஏற்பட்ட தாம் 


அந்த ஆலையில் இரவு பணியில் இருந்த கும்பகோணம் பெண்கள் ஒரிசா மாநிலத்தில் இருந்து இங்கு வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் புகை நெடி தாங்க முடியாமல் முச்சு திணறலில் சுருண்டு மயக்கமாகி தொப் தொப் யென்று கீழே விழுந்தனர் 


உடனே ஆம்லன்ஸ முலம் தூத்துக்குடியில் உள்ள திலக் அருள்ராஜ் ஏவிஎம் என மூன்று தனியார் மருத்துவமனையில் அட்மிட் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளார்கள்..


ஆலை விளக்கம் 

மறுநாள் வழக்கமாக எல்லா ஆலை தரப்பு சொல்வது போல்?


இவங்களும் ஏசி மின்கசிவு புகை கிளம்பி யது என தன்னிலை விளக்கம் செய்தியாளர்கள் மத்தியில் பேசிவிட்டு சென்றுள்ளார்கள்

அதன் பின்னர் மாவட்ட அதிகாரி கள் அந்த ஆலையில் கவனமாக ஆய்வு செய்து உள்ளன


கனிமொழி எம்பி அதிர்ச்சி!!!

கடந்த காலங்களில்... தூத்துக்குடி சுற்றியுள்ள கழிவுநீர் நீரோடைகளில்

 மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட, கோமஸ்புரம் அருகில் பாயும் உப்பாறு ஓடையில்  கடல் மீன்கள் உணவு சுத்திகரிக்கும் நிறுவனம் வெளியேற்றினார் கள் 

ரசாயன கழிவுகளால் நீரின் தன்மை மாறி செந்நிறமாக காட்சியளித்தது.

 இதை நேரில் தூத்துக்குடி  கனிமொழி 

 (28/01/2023) அன்று அவ்வழியே சென்ற போது ?

பாலத்தின் மீது நின்று ரசாயனம் கழிவு செந்நீராக பெருக்கெடுத்து ஓடியது பாத்தார்.அதிர்ச்சியடைந்தார்



 அப்போதே உரிய நடவடிக்கை எடுக்க கேட்டு கொண்டார்.


உடன் வந்த தூத்துக்குடி மாவட்டம் கலெக்டர் செந்தில் ராஜ் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் இருந்தார் கள்.


அப்போது கனிமொழி எம்பி உடன் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா இராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, உடனிருந்தனர் என்பது குறிப்பிட தக்கது

 ஆலை க்கு அருகில் பள்ளி க்கு கல்வி துறை அனுமதி யா??

ஆலை யில் பெரிய அளவில் உள்ள டேக் வெளிப்புறம் பாத்தால் கூட தெரியும் 

தற்போது... நச்சு கசிவு அமோனியோ கசிவு ஆலைகள் இருக்கும் அருகாமையில்  பள்ளி கூடங்கள் இருக்காலாமா?

தனியார் பள்ளியான வேலவன் சிறுவர் சிறுமியர் படிக்கும் ஆங்கில பள்ளி இருக்கிறது 


பகல் நேரத்தில் ஏதாவது வீபரீதம் சம்பவம் நடைபெறாது என சொல்ல நிச்சயமில்லை 

 அருகாமையில் இருக்கும் பள்ளி குழந்தைகள் நிலை ?

ஆலை அருகில் சிறுவர் சிறுமியர் படிக்கும் ஆங்கில பள்ளி யா

எதை ஆய்வு செய்து 

எப்படி கல்வி துறை அனுமதி வழங்கப்பட்டது 

என்று கேள்வியையும் எழுப்பி வருகின்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக