தூத்துக்குடி 14வது வார்டு பகுதியில் நடைபெறும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.
இது பற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.
இந்நிலையில் மாநகராட்சி 14வது வார்டுக்குட்பட்ட செல்வ விநாயகர்புரத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. 14.30 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் மற்றும் சிறிய பாலம் அமைக்கும் பணியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பார்வையிட்டார்.
பின்னர் பொதுமக்களிடம் அமைச்சர் கூறுகையில் மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் முறையாக நடைபெறாமல் இருந்ததால் பல்வேறு குறைபாடுகள் தற்போது கண்டறியப்பட்டு ஓவ்வொரு பகுதிக்கும் தேவையான சாலைகள் கால்வாய்கள் மின்விளக்குகள் சீரான குடிநீா் போன்ற அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றன. விடுபட்ட சில பணிகளையும் அதை முழுமையாக அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி அனைத்து குறைகளையும் முழுமையாக நிறைவேற்றி தருவேன், என்று உத்தரவாதம் அளித்து ஓப்பந்ததாரர்களிடம் நல்லமுறையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தொிவித்தார்.
உடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், வட்டச் செயலாளர் காளிதுரை வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக