விருதுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விருதுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 21 மார்ச், 2025

தமிழ்ச் செம்மல் விருது பெற்ற ஆசிரியருக்கு பள்ளியில் பாராட்டு விழா

Tamil Nadu updates 🗞️ news by Arunan journalist 

தமிழ்ச் செம்மல் விருது பெற்ற ஆசிரியருக்கு பள்ளியில் பாராட்டு விழா

தமிழக அரசின் 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருது பெற்றார் நெய்தல் யூ. அண்டோ 

அவர் பணியாற்றும் புனித பிரான்சிஸ் சவேரியார் மேனிலைப் பள்ளியில் 19.03.2025 அன்று பாராட்டு விழா நடைபெற்றது.



விழாவில், சவேரியானா இல்லத்தின் அதிபர் அருள்முனைவர் ஆரோக்கியசாமி சே.ச., பள்ளித் தாளாளர்  பிரான்சிஸ் சேவியர் சே.ச., தலைமையாசிரியர் . அமல்ராஜ் சே.ச. ஆகியோர் ஆசிரியருக்கு வாழ்த்து தெரிவித்தனர். கவிஞர் காலின்ஸ் வாழ்த்துப்பா பாடி மகிழ்த்தார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வ.உ.சி. கல்வியியல் கல்லூரியின் தாளாளர் . எ.பி.சி.வி. சண்முகம், தனது சிறப்புரையில், நெய்தல் யூ. அண்டோவின் மேடைப்பேச்சு, எழுத்து, சமூகப் பணி ஆகிய மூன்றிற்காகவே இவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். 



மேலும், தூய்மையான வரலாற்றைப் பதிவு செய்யும் எழுத்துப் பணி தொடர வேண்டும் என்றார்.

நிகழ்வில் உதவித் தலைமையாசிரியர்கள் . வளன் சே.ச., ஜார்ஜ் பீட்டர் பாபு, ஞானசேகர், ஹம்பிரி மிராண்டா, ஆசிரியர் செயலர் பெனிட்டன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் விழாவில் கலந்துகொண்டு ஆசிரியரை பாராட்டினர்.

முன்னதாக, மாணவர்கள் இறை வணக்கம் பாட, ஆசிரியர் பிரான்சிஸ் ஹென்றி வரவேற்பு வழங்க, ஆசிரியர் டைசன் நன்றியுரை கூற, ஆசிரியர் ராஜ்குமார் நிகழ்ச்சி தொகுத்து வழங்க, இறுதியாக விருது பெற்ற நெய்தல் யூ. அண்டோ தனது நன்றி உரையுடன் விழாவை நிறைவு செய்தார்.

திங்கள், 27 ஜனவரி, 2025

ஜெ.ப.பிரபாகர், காவல் கண்காணிப்பாளர், தமிழ்நாடு - குடியரசு தினம் விருது

 Tamil Nadu updates,

செய்தி புகைப்படம் பலவேச ராஜா எடிட்டர் 

ஜெ.ப.பிரபாகர், காவல் கண்காணிப்பாளர், தமிழ்நாடு - குடியரசு தினம் விருது


தமிழ்நாட்டின் அதிதீவிரப்பயிற்சி பள்ளியில் பணிபுரியும் காவல் கண்காணிப்பாளர் ஜெ.ப.பிரபாகருக்கு, 2025-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு மாண்புமிகு குடியரசு தலைவர் பதக்கம் (HON'BLE PRESIDENT MEDAL) வழங்கப்பட்டுள்ளது. 

ஜெ.ப பிரபாகர் (காவல் கண்காணிப்பாளர் )


இவரது சீர்மிகு மற்றும் மெச்சத்தகுந்த பணிக்கு இவ் பெருமையை வழங்கி பாராட்டப்பட்டுள்ளது.


தூத்துக்குடி மாவட்டம், அத்திமரப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெ.ப.பிரபாகர், தனது கல்வி பயணத்தை அத்திமரப்பட்டி T.D.T.A தொடக்கப்பள்ளியில் தொடங்கி, CALDWELL HIGHER SECONDARY SCHOOL- இல் மேல் நிலை கல்வி முடித்தார். 


1990-ம் ஆண்டு காமராஜ் கல்லூரியில் வேதியியல் பட்டப்படிப்பினை முடித்து, 1997-ம் ஆண்டு காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து, தற்போது காவல் கண்காணிப்பாளராக சிறப்பாக சேவை வழங்கி வருகிறார்.


இந்த வகையில் அவர் சாதித்த சாதனைகளுக்கான நன்றி மற்றும் பாராட்டுகளுடன், அவருக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டது.


வெள்ளி, 13 செப்டம்பர், 2024

2023 - 2024 தமிழக அரசின் கிரீன் சாம்பியன் விருது" சுற்றுச்சூழல் ஆர்வலர்தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த தாமோதரனுக்கு வழங்கப்பட்டது

  ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃14-10-9- 2024 photo news 

by sunmugasunthram Reporter 

தமிழ்நாடு அரசின் சார்பில் "கிரீன் சாம்பியன் விருதும்" சான்றிதழும், ரூபாய் ஒரு லட்சத்துக்கான காசோலையும் அரசு தேர்வு பெற்ற வருக்கு வழங்கப்படும் 



கீரீன் சாம்பியன் விருது 

    இந்த 2023- 2024 ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும், தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிறுவனத் தலைவருமான தாமோதரனுக்கு 2023 - 2024ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் கிரீன் சாம்பியன் விருது வழங்கப்பட்டது 

பசுமை நாயகன்!!!!

 தமிழ்நாடு  முதலமைச்சரின் பசுமை தமிழ்நாடு இயக்கத்திற்கு வலு சேர்க்கும் விதமாக தூத்துக்குடி மட்டுமல்லாது  தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பசுமை குறுங்காடுகளையும், பசுமை குறும்பூங்காவனங்களையும் உருவாக்கி நாட்டின் பசுமை போர்வையை மேம்படுத்த சிறப்பாக சேவையாற்றியுள்ளார். 

சிறந்த சேவைகள்

கன்னியாகுமரி,  தூத்துக்குடி மாவட்ட கடற்கரைகளில் 16 லட்சத்துக்கும் மேலான பனைவிதைகளை நடவு செய்து, தமிழகத்தின் தேசிய மரமான பனைமரங்களை மீட்டெடுக்கும் விதமாகவும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும் சிறப்பாக  பணியாற்றியுள்ளார். மேலும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் குறித்து தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி அமைச்சர்கள், சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். 


இவர் ஏற்கனவே பல்வேறு அமைப்புகள் மூலமாக பசுமை பாதுகாவலன், பசுமை தோழன்,  பசுமை நாயகன், பசுமை செந்துளிர் என பல விருதுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் பெற்றுள்ளார். 

இவரின் வழிகாட்டி காசி விஸ்வநாதன்!!!

    தற்போது தமிழக அரசின் சுற்றுச் சூழலுக்கான உயரிய விருதான "கிரீன் சாம்பியன் விருது" பெற்றுள்ள தாமோதரன் தன்னுடைய வழிகாட்டியாக விளங்கும் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவரும், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளருமான காசிவிஸ்வநாதனிடம் வாழ்த்துக்களையும், பாராட்டுதலையும்  பெற்றார். 

நன்றி 

யூனியன் துணைச்சேர்மன் காசிவிஸ்வநாதனுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார். 


உடன் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், பசுவந்தனை காவல் நிலையக்காவலர் மகாராஜன் ஆகியோர் உடன் இருந்தனர். 


செவ்வாய், 3 செப்டம்பர், 2024

கருங்குளம் அரசு பள்ளி ஆசிரியர் சக்திவேலுக்கு பசுமை முதன்மையாளர் விருது மற்றும் ஒரு லட்சம் காசோலை வழங்கல்

  ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃3-9-2024 photo news 

by sunmugasunthram Reporter 

தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாாியம் சாா்பில் பசுமை முதன்மையாளர் விருது தூத்துக்குடி கருங்குளம் அரசு பள்ளி ஆசிாியர் சக்திவேல்க்கு விருதுடன் ஓரு லட்சம் ரூபாய்  வழங்கப்பட்டது.


இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 2024 ஜீன் 12ம் தேதி நடைபெற்ற சிறந்த பசுமை முதன்மையாளர் விருதுக்கான தேர்வு நடைபெற்றது. 



தேர்வு!!!

இந்நிகழ்ச்சியில்... மொத்தம் கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி தொழில் கல்வி ஆசிாியர் சக்திவேல் உள்பட 7 பேர் கலந்து கொண்டனர். 


 தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இந்த முதன்மையாளர் தேர்வு நடைபெற்றது. 


புதுமையான பசுமை தயாரிப்பு!¡!


மீன் கழிவுகளின் இருந்து பதப்படுத்தப்பட்டு திரவ வடிவத்தில் எடுக்கப்பட்ட மீன் அமீலத்தில் 50மிலி எடுத்து அதோடு 10 லிட்டர் தண்ணீர் கலந்து  செடிகளின் மீது தௌித்தால் அதிக மகசூல் கிடைக்கும் என்பதை தன்னுடைய தோட்டத்தில் பாிசோதனை நடத்தி வெற்றி கண்டதோடு, நிறுத்திவிடாமல் அந்த மீன் அமிலங்களை பிற இடங்களில் நடப்படும், மரக்கன்றுக்களுக்கும் பசுமை பூங்காக்களுக்கும் ெதளிக்கப்பட்டு வருகிறது என்பது புதுமையான பசுமை தயாாிப்பாகும். 


ஈஷா மையம்!!! மரக்கன்று!!

மேலும் வருடந்தோறும் 50 ஆயிரம் மரகன்றுகள் வரை ஈஷா மையத்தோடு இணைத்து கருங்குளம் ஊராட்சிக்குட்பட்ட பஞ்சாயத்தை சார்ந்த கிராம மக்களுக்கு இலவசமாக கொடுத்து வருகிறார். 

மாணவர்களுக்கு விழிப்புணர்வு!!!

இளம் பருவத்தை சார்ந்த மாணவர்கள் தனது செல்போனில் பாா்த்து பொழுதை போக்காமலும், தன்னுடைய வாழக்கையை இழக்காமலும், இருக்கும் பொருட்டு தனது விவசாய பெற்றோர்களின் நிலைமையினை புாிந்து கொள்ளும் வகையில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அருகில் உள்ள கிராமங்களில் எல்லையில் உள்ள விவசாய நிலங்களோடு அழைத்து செல்லும் இயற்கை விவசாயம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். 

பிளாஸ்டிக் (நெகிழி) ஒழிப்பு!!!

அது போல் கருங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மண்ணில் புதைத்து பல நாட்களாக அப்புறப்படுத்தப்படாமல் இருந்த எண்ணற்ற நெகிழி கழிவுகளை கண்டெடுத்து அதனை மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 


மருத்துவ குணங்கள் உள்ள செடிகள் வளர்ப்பு!!!

இவர் வேலைப்பாா்க்கும் கருங்குளம் அரசு பள்ளியில் பசுமை பூங்கா அமைத்து அதில் மருத்துவ குணம் நிறைந்த நித்யகல்யாணி செடி, துதுவளை, கண்டகத்தாி, நொச்சி, கற்பூரவள்ளி, மணத்தக்காளி, மருதாணி, செடிகளும் காய் மற்றும் பழத்தோட்டம் அமைத்து பாரமாித்து வருகிறார். 



பாராட்டு விருது!!!

மேற்கண்ட இவாின் சேவையை பாராட்டி தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாாியம் சாா்பில் பசுமை முதன்மையாளர் விருது ஆசிாியர் சக்திவேல்க்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் இசக்கியம்மாள், சான்றிதழள் மற்றும் ரூ1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கினார்.

 நிகழ்ச்சியில் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் பிரதீப் உடனிருந்தார்.

புதன், 1 மார்ச், 2023

புதுவை தேச மாத இதழ் 13.ஆண்டு விழா மற்றும் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா

 புதுவை தேச மாத இதழ்

13.ஆண்டு விழா மற்றும்

சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா 

நேற்று 28/02/2023 ம் பரபரப்பாக வெகு விமரிசையாக நடைபெற்றது.



இது பற்றிய செய்தியாவது:-


புதுச்சேரியில் தமிழ் நாடு பிரஸ் அண்ட் மீடியா நிறுவனத்தலைவர் புதுவை தேச மாத இதழ் ஆசிரியர்

 மு.சிவதமிழவன் அவர்களது முன்னெடுப்பில்

புதுவை தேச மாத இதழ்

13.ஆண்டு விழா மற்றும்

சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் 

புதுச்சேரி முதல்வர் மாண்புமிகு ந.ரங்கசாமி

மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர்

திருமதி தமிழிசை சொளந்தர்ராஐன் அவர்களது ஆசியுடன்

அமைச்சர் பெருமக்கள்

கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தது நிகழ்ச்சி வந்திருந்த அனைவருக்கும் பெரு மகிழ்ச்சி யாக  அமைந்தது.

ஏனெனில்...

 சோதனைகளை கடந்து

சாதனை படைக்கும்

  தமிழ்நாடு பிரஸ் அண்ட்

மீடியா யூனியனின் 

    தலைவர் தலைமை நிர்வாகிகள் தோளோடு தோள்  கொடுத்து இந்த நிகழ்ச்சி பெருவிழாவாக இருந்தது.

பின்பு சாதனை யாளர் விருது வழங்கப்பட்டது .



நிகழ்ச்சி நிறைவில் 

புதுவை

தேச இதழ ஆசிரியர் நிர்வாகிகள் செய்தி 

தொடர்பாளர்கள் வாசகர்கள்  புதுச்சேரி தமிழ் நாடு

பத்திரிகை சொந்தங்களுக்கும் நண்பர்

களுக்கும் நிர்வாகிகளுக்கும்

 தமிழ்நாடு பிரஸ் அண்ட்

மீடியா ரிப்போர்ட்ஸ் யூனியன் சார்பாக நன்றி தெரிவித்தனர்.

         

                              🙏