வெள்ளி, 21 மார்ச், 2025

தமிழ்ச் செம்மல் விருது பெற்ற ஆசிரியருக்கு பள்ளியில் பாராட்டு விழா

Tamil Nadu updates 🗞️ news by Arunan journalist 

தமிழ்ச் செம்மல் விருது பெற்ற ஆசிரியருக்கு பள்ளியில் பாராட்டு விழா

தமிழக அரசின் 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருது பெற்றார் நெய்தல் யூ. அண்டோ 

அவர் பணியாற்றும் புனித பிரான்சிஸ் சவேரியார் மேனிலைப் பள்ளியில் 19.03.2025 அன்று பாராட்டு விழா நடைபெற்றது.



விழாவில், சவேரியானா இல்லத்தின் அதிபர் அருள்முனைவர் ஆரோக்கியசாமி சே.ச., பள்ளித் தாளாளர்  பிரான்சிஸ் சேவியர் சே.ச., தலைமையாசிரியர் . அமல்ராஜ் சே.ச. ஆகியோர் ஆசிரியருக்கு வாழ்த்து தெரிவித்தனர். கவிஞர் காலின்ஸ் வாழ்த்துப்பா பாடி மகிழ்த்தார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வ.உ.சி. கல்வியியல் கல்லூரியின் தாளாளர் . எ.பி.சி.வி. சண்முகம், தனது சிறப்புரையில், நெய்தல் யூ. அண்டோவின் மேடைப்பேச்சு, எழுத்து, சமூகப் பணி ஆகிய மூன்றிற்காகவே இவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். 



மேலும், தூய்மையான வரலாற்றைப் பதிவு செய்யும் எழுத்துப் பணி தொடர வேண்டும் என்றார்.

நிகழ்வில் உதவித் தலைமையாசிரியர்கள் . வளன் சே.ச., ஜார்ஜ் பீட்டர் பாபு, ஞானசேகர், ஹம்பிரி மிராண்டா, ஆசிரியர் செயலர் பெனிட்டன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் விழாவில் கலந்துகொண்டு ஆசிரியரை பாராட்டினர்.

முன்னதாக, மாணவர்கள் இறை வணக்கம் பாட, ஆசிரியர் பிரான்சிஸ் ஹென்றி வரவேற்பு வழங்க, ஆசிரியர் டைசன் நன்றியுரை கூற, ஆசிரியர் ராஜ்குமார் நிகழ்ச்சி தொகுத்து வழங்க, இறுதியாக விருது பெற்ற நெய்தல் யூ. அண்டோ தனது நன்றி உரையுடன் விழாவை நிறைவு செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக