ஞாயிறு, 23 மார்ச், 2025

திமுகவின் கழிவறை அரசியலுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள் – பாஜக

Tamil Nadu updates 24-3-2025

சென்னை: திமுக அரசு பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் சேர்ந்த படங்களை கழிவறைகளில் ஒட்டியது என குற்றம் சாட்டியுள்ள பாஜக, இதனை கடுமையாக கண்டித்துள்ளது.



தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்ட அறிக்கையில், "திமுகவின் கழிவறை அரசியல், அருவருப்பான ஆபாச சிந்தனை மற்றும் ஊழல் ஆட்சியை தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைக்கும்," என குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது:

"திமுக அரசு நடத்திய ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் ஊழலை அமலாக்கத்துறை அம்பலப்படுத்தியதை தொடர்ந்து, பாஜகவினர் தமிழகம் முழுவதும் ஜனநாயக போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களை சட்டத்திற்கு புறம்பாக தமிழக காவல்துறை கடுமையாக அடக்க முயன்றது. இதற்கெதிராக பாஜக மகளிர் அணியினர், தாலியை அறுக்கும் டாஸ்மாக் கடைகளின் முன் தமிழக முதல்வர் ஸ்டாலினின் படங்களை ஒட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்."

"இதுவரை 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1,000க்கும் அதிகமான பெண்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 200 பேர் கைது செய்யப்பட்டு, 50 பேர் ரிமாண்டில் அனுப்பப்பட்டுள்ளனர். காவல்துறை தொடர்ந்து போராட்டக்காரர்களை தேடி மிரட்டல் விடுத்து வருகிறது."

"மக்கள் விரோத ஆட்சியை எதிர்த்து, திமுகவின் ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வர, பாஜக மகளிர் அணியினர் துணிவுடன் போராடி வருகின்றனர். திமுக அரசு எவ்வளவு அடக்குமுறையை பயன்படுத்தினாலும், பாஜகவினர் போராட்டத்தை தொடருவார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில், திமுக அரசு தனது ஊழல் மற்றும் மக்கள் விரோத போக்குக்காக தமிழக மக்கள் முத்திரை குத்துவார்கள்."

"தமிழகத்தில் ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் ஊழல், சென்னை மாநகராட்சி கழிவறை காண்ட்ராக்ட் ஊழல் உள்ளிட்டவை அம்பலமாகும். 2026 தேர்தலில் தமிழக மக்கள் அரசியல் தூய்மையை உருவாக்க பாஜகவிற்கு ஆதரவு அளிப்பார்கள்," என்று கூறினார்.

- ஏ.என்.எஸ். பிரசாத்
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக