கல்வி செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 25 ஜூன், 2025

100% தேர்ச்சி சாதனை: ஸ்ரீ சங்கரா பகவதி கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம், கொம்மடிக்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வித் தரத்தில் தொடர்ந்தும் சாதனை படைத்து வருகிறது.



இக்கல்லூரியில் 2023 - 2025 கல்வியாண்டில் முதுகலை வணிகவியல் (M.Com) படிப்பை பயின்ற மாணவர்கள் அனைவரும் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த மாணவர்களின் உழைப்பையும், பேராசிரியர்களின் முழுமையான வழிகாட்டலையும் கல்லூரி முதல்வர் டாக்டர். அருள்ராஜ் பொன்னுதுரை மற்றும் துணை முதல்வர் டாக்டர். மகேஷ் குமார் சிறப்பாக பாராட்டினர்.

2025 - 2026 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. சேர்க்கை தொடர்பான கூடுதல் தகவலுக்கு 99655 09113 மற்றும் 99524 88989 என்ற எண்ணங்களில் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.



சனி, 21 ஜூன், 2025

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் சர்வதேச யோகா தினம் விழா கொண்டாடப்பட்டது

 Tamil Nadu updates, photo news by Tamilan Ravi

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
தேதி: ஜூன் 21, 2025

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் சர்வதேச யோகா தினம் விழா கொண்டாடப்பட்டது

தூத்துக்குடி:
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் ஜூன் 21ஆம் தேதி சிறப்பாக யோகா விழா நடத்தப்பட்டது.


இந்த நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் ஜெஸி பெர்னான்டோ தலைமையிலும், கல்லூரி செயலர் அருட்சகோதரி குழந்தை திரேஸ் முன்னிலையிலும் நடைபெற்றது. 



காலை நேரத்தில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற யோகா பயிற்சியை பயிற்சியாளர் முத்துலட்சுமியும், என்.சி.சி. லெப்டினன்ட் மேரி பிரியாவும் மாணவிகளுக்கு வழிகாட்டியாக இருந்து நேரடியாக நடத்தினர்.



சுமார் 70க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவிகள் இதில் பங்கேற்று, யோகாவின் முக்கியத்துவத்தையும், பல்வேறு ஆசனங்களின் பயன்களையும் புரிந்து கொண்டு ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.


மாணவிகளிடையே மன உறுதி, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை வளர்க்கும் நோக்கில் இந்நிகழ்வு சிறப்பாக அமைந்தது என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வெள்ளி, 21 மார்ச், 2025

தமிழர் அடையாளங்கள் தமிழர்களால் அழிக்கப்படுகின்றன – திருப்பணி செட்டிகுளத்தில் விழிப்புணர்வு முகாம்

Tamil Nadu updates,

Photo news by Arunan journalist 

தமிழர் அடையாளங்கள் தமிழர்களால் அழிக்கப்படுகின்றன – திருப்பணி செட்டிகுளத்தில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது 



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி: தமிழர் பண்பாடு, மொழி மற்றும் அடையாளங்களை காப்பாற்ற வேண்டிய தேவையை வலியுறுத்தும் வகையில், திருப்பணி செட்டிகுளத்தில் நாட்டு நல பணித் திட்ட முகாம் சிறப்பாக நடைபெற்றது. சாயர்புரம் டாக்டர் ஜி. யு. போப் பொறியியல் கல்லூரி சார்பாக நடைபெற்ற இந்த முகாமில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இம்முகாமிற்கு கல்லூரி தாளாளர் வழக்கறிஞர் ரவீந்திர சார்லஸ் தலைமை வகித்தார். முதல்வர் டாக்டர் ஜே. ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார். முகாமின் சிறப்பு அழைப்பாளராக திருப்பணி செட்டிகுளம் ஊராட்சி தலைவர் சுயம்புலிங்கம் கலந்து கொண்டு விழிப்புணர்வு உரையாற்றினார்.

தமிழரின் அடையாளங்கள் – விழிப்புணர்வு உரை

முகாமின் முக்கிய நிகழ்வாக தமிழன்டா இயக்க தலைவர் ஜெகஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 


"தமிழர் அடையாளங்கள் தமிழர்களால் அழிக்கப்படுகின்றன" என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார். இவ்வுரையில், தமிழர் பண்பாடு, மரபுகள், மொழி, கலாச்சாரம் ஆகியவை மெல்ல மெல்ல அழிவுப் பாதையில் செல்லக் காரணமான சமூகச் சூழல், கல்வி மற்றும் பண்பாட்டு மாற்றங்களை அவர் விளக்கினார்.



"தமிழர்கள் தங்கள் அடையாளங்களை இழக்காமல் இருக்க, மரபு, மொழி, வரலாறு ஆகியவற்றை பாதுகாக்கும் பொறுப்பு நம்மிடமே உள்ளது" என அவர் வலியுறுத்தினார். மேலும், இயற்கை உணவு, ஆரோக்கியம், வாழ்வியல் தத்துவங்கள் குறித்து மாணவர்களிடமும் பொதுமக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

முகாமின் முக்கிய நிகழ்வுகள்

  • முதல் நாள்: இயற்கை உணவு மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.
  • மாணவர்கள் பங்கேற்பு: பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்களது சமூகப் பணியின் ஒரு பகுதியாக முகாமில் கலந்துகொண்டு பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டனர்.
  • பொதுமக்கள் உற்சாக பங்கேற்பு: ஊர் மக்கள் ஆர்வத்துடன் முகாமில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு

இந்த முகாமை நாட்டு நல பணி திட்ட அலுவலர் உதவி பேராசிரியர் சா. டென்னிசன் ஒருங்கிணைத்தார். மேலும், எஸ்தர் தங்கம், அந்தோணி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர்.



இம்முகாம், தமிழர் மரபு மற்றும் பண்பாட்டு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை அதிகரிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது.

மேலும் விவரங்களுக்கு: தூத்துக்குடி லீக்ஸ்

புதன், 29 ஜனவரி, 2025

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மகளிர் பூப்பந்தாட்டம்: புனித மரியன்னை கல்லூரி சாம்பியன்

 # மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மகளிர் பூப்பந்தாட்டம்: புனித மரியன்னை கல்லூரி சாம்பியன்

Tamil Nadu updates, photo news by Arunan journalist 

தூத்துக்குடி, ஜனவரி 29, 2025


APCV மகாலட்சுமி கல்லூரியில் நடைபெற்ற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான மகளிர் பூப்பந்தாட்ட போட்டியில், புனித மரியன்னை கல்லூரி மாணவிகள் அணி வெற்றிக் கோப்பையை கைப்பற்றியது.



கேப்டன் மாளவிகா தலைமையிலான இந்த அணி, அரை இறுதியில் வ.உ.சி கல்லூரி அணியை நேர் செட்களில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் APCV மகாலட்சுமி கல்லூரி அணியை 35-28, 28-35, 35-28 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.


"குறிப்பிடத்தக்க வகையில், புனித மரியன்னை கல்லூரி அணி கடந்த ஆண்டு தென்காசி ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் நடந்த போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தது. இந்த ஆண்டு போட்டியை நடத்திய APCV மகாலட்சுமி கல்லூரி அணியையே வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது."



வெற்றி பெற்ற அணி உறுப்பினர்கள்:

- மாளவிகா (கேப்டன்)

- அனி

- P.சந்தியா

- சசி

- முவேதா

- கயல்விழி

- ஸ்ரீமாரி தங்கம்

- மெர்ஸி டயானா

- பவித்ரா


வெற்றி பெற்ற அணிக்கு சுழல்கோப்பை வழங்கப்பட்டது. 




சிறப்பாக விளையாடிய அனைத்து வீராங்கனைகளையும், அவர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள் திரு. பாலசிங் மற்றும் திரு. ஈஸ்டர் ஆகியோரையும் புனித மரியன்னை கல்லூரி முதல்வர் முனைவர். சகோ. ஜெஸ்ஸி பர்ணாந்து பாராட்டி வாழ்த்தினார்.



புதன், 20 நவம்பர், 2024

மாணவி மகேஷ் நாச்சியார் சாதனை சிலம்பம் போட்டியில் முதலிடம் தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம்கால்வாய் கிராமத்தை சோ்ந்த பள்ளி மாணவி

அகில இந்திய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சோ்ந்த   மாணவி மகேஷ் நாச்சியார் சாதனை படைத்துள்ளார்.

இது பற்றிய செய்தியாவது:-

பெங்களுாில் அகில இந்திய அளவில்  சிலம்பம் போட்டி நடைபெற்றது இதில் பல்வேறு மாநிலங்களில் உள்ள சிலம்பம் பயிற்சி எடுத்த மாணவிகள் போட்டி யில் கலந்து கொண்டார்கள்.


தமிழகத்தின் சார்பில்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கால்வாய் கிராமத்தை சோ்ந்த உக்கிரபாண்டி இசக்கிராணி தம்பதியினர் மகள் மகேஷ் நாச்சியார். கலந்து கொண்டார்.


பெங்களூரில் அகில இந்திய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் மகேஷ் நாச்சியார் முதலிடத்தில் வெற்றி பெற்றார்.



மாணவி மகேஷ் நாச்சியார்  இந்தியாவில் முதலிடம் பெற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளாா்.


    

     இந்த விளையாட்டு போட்டிகளின் மூலம் பல மாணவ மாணவிகள் அரசுத்துறை சார்ந்த படிப்புடன் கூடிய மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அரசுத்துறை சார்ந்த பணிகளுக்கும் தேர்வாகி வருகின்றன. 


தமிழக அரசை பொறுத்தவரை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் தற்போது துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பும் தமிழகத்தில் எல்லா விளையாட்டு போட்டி களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டு ஊக்குவித்து வருகிறார். 



மாநில அளவில் தேர்ச்சி பெறும் வீரர்களுக்கு அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டிகள் மட்டுமின்றி உலக அளவில் நடைபெறும் போட்டி களுக்கும் தேவையான உதவிகளை அரசின் சார்பில் செய்து வருகிறார். 

  Photo news by

sunmugasuthram Reporter