அகில இந்திய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சோ்ந்த மாணவி மகேஷ் நாச்சியார் சாதனை படைத்துள்ளார்.
இது பற்றிய செய்தியாவது:-
பெங்களுாில் அகில இந்திய அளவில் சிலம்பம் போட்டி நடைபெற்றது இதில் பல்வேறு மாநிலங்களில் உள்ள சிலம்பம் பயிற்சி எடுத்த மாணவிகள் போட்டி யில் கலந்து கொண்டார்கள்.
தமிழகத்தின் சார்பில்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கால்வாய் கிராமத்தை சோ்ந்த உக்கிரபாண்டி இசக்கிராணி தம்பதியினர் மகள் மகேஷ் நாச்சியார். கலந்து கொண்டார்.
பெங்களூரில் அகில இந்திய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் மகேஷ் நாச்சியார் முதலிடத்தில் வெற்றி பெற்றார்.
மாணவி மகேஷ் நாச்சியார் இந்தியாவில் முதலிடம் பெற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளாா்.
இந்த விளையாட்டு போட்டிகளின் மூலம் பல மாணவ மாணவிகள் அரசுத்துறை சார்ந்த படிப்புடன் கூடிய மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அரசுத்துறை சார்ந்த பணிகளுக்கும் தேர்வாகி வருகின்றன.
தமிழக அரசை பொறுத்தவரை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் தற்போது துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பும் தமிழகத்தில் எல்லா விளையாட்டு போட்டி களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டு ஊக்குவித்து வருகிறார்.
மாநில அளவில் தேர்ச்சி பெறும் வீரர்களுக்கு அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டிகள் மட்டுமின்றி உலக அளவில் நடைபெறும் போட்டி களுக்கும் தேவையான உதவிகளை அரசின் சார்பில் செய்து வருகிறார்.
Photo news by
sunmugasuthram Reporter
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக