Tamil Nadu updates
photo news by Arunan journalist
பாளையங்கோட்டை சிறையில் மார்க்கண்டேயனை சந்தித்தார் உதயநிதி ஸ்டாலின் !!! விடுதலைக்கான சட்ட நடவடிக்கைகள் தீவிரம் தவெக ஆட்சியை கடுமையாக விமர்சித்த பேச்சு...
திருநெல்வேலி: ஜுலை 27
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு துணை முதலமைச்சரும் தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று சிறைக்குச் சென்று அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அப்போது, சிறையில் இருந்தாலும் முன்பைவிட அதிக உற்சாகத்துடனும், கழகப் பணியிலும் மக்கள் சேவையிலும் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்ற மன உறுதியுடனும் மார்க்கண்டேயன் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆறுதல்!!!
மேலும், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, மார்க்கண்டேயனின் விடுதலைக்காக கழகத்தின் வழக்கறிஞர்கள் சட்ட ரீதியான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், அதுகுறித்து விளக்கி அவருக்கு ஆறுதல் தெரிவித்ததாகவும் கூறினார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில்..
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ...உதயநிதி ஸ்டாலின்,
"பழிவாங்கும் நோக்கத்தில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மிசா மற்றும் அவசரநிலை காலத்தையே எதிர்கொண்ட இயக்கம் தி.மு.க. ஆகும். இதுபோன்ற கைது நடவடிக்கைகளுக்கு கழகத் தொண்டர்கள் ஒருபோதும் அஞ்சமாட்டார்கள்.
விமர்சனங்களை அடக்குவதற்காக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு கைது நடவடிக்கையும் நீதிமன்றத்தில் தோல்வியடைகிறது. இதேபோல் மக்கள் மன்றத்திலும் இந்த ஆட்சி தோல்வியை சந்திப்பது உறுதி" என்று கடுமையாக விமர்சித்தார்.
இந்த சந்திப்பின் போது ...
முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, மேயர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக