சனி, 25 ஜூலை, 2026

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கல்

Tamil Nadu updates,

ஓட்டப்பிடாரம், ஜூலை 25:

முன்னாள் முதலமைச்சரும், பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு,... ஓட்டப்பிடாரம் அருகே மாப்பிள்ளையூரணி டேவிஸ்புரம் ஜெ.ஜெ. நகர் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் 4-வது ஆண்டு மாட்டு வண்டி எல்கைப் பந்தயப் போட்டி சிறப்பாக நடைபெற்றது.

எம். சுந்தர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போட்டிக்கு சோனாராஜன், செந்தில்குமார், குமார் ஜி., ராஜா, பாஸ்கர், சுரேஷ் கண்ணன், ரியால்சன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 

thoothukudileaks




சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாட்டு வண்டி வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ..

முதல் பரிசை ...

எஸ்.வி. சிட்பண்ட் நிறுவனத்தின் நிறுவனர் ஏ. சுதாகர் வழங்கி பாராட்டினார். 


4-வது பரிசை மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி பொன்பாண்டி வழங்கினார். வெற்றி பெற்ற அனைத்து வீரர்களுக்கும் பொதுமக்கள் கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

டேவிஸ்புரம் சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று விறுவிறுப்பாக நடைபெற்ற மாட்டு வண்டி எல்கைப் பந்தயத்தை கண்டு களித்தனர். காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சி அப்பகுதியில் திருவிழா சூழலை ஏற்படுத்தியதுடன், பாரம்பரிய விளையாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக