சனி, 25 ஜூலை, 2026

444வது பனிமய மாதா திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் OLS Friends பொருட்காட்சி Expo 2026 தொடக்கம்

Tamil Nadu updates, 

photo news by Arunan journalist 


தூத்துக்குடி, ஜூலை 25: 

உலகப் பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலயத்தின் 444வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, OLS Friends சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட "Expo 2026" பிரம்மாண்ட பொருட்காட்சி, சனிக்கிழமை (25.07.2026) மாலை 5 மணியளவில் தூத்துக்குடி பெல் ஹோட்டல் அருகே உள்ள புனித சவேரியானா இல்ல மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது.

thoothukudileaks


நிகழ்ச்சியில், பொருட்காட்சியின் தலைமை அலுவலகத்தை பரிசுத்த பனிமய அன்னை பேராலய அதிபர் அருட்தந்தை ஜான் செல்வம் (Rev. Fr. John Selvam) மற்றும் புனித சவேரியானா இல்ல அதிபர் அருட்தந்தை சிங்கராயன் (Rev. Fr. Singarayan) ஆகியோர் திறந்து வைத்து சிறப்பித்தனர்.

thoothukudileaks


தொடர்ந்து நடைபெற்ற விழாவில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி OLS Friends Expo 2026 பொருட்காட்சியை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். 

மேயர் ஜெகன் பெரியசாமி பரபரப்பு பேச்சு 

அப்போது, 444வது பனிமய மாதா திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் இந்த பொருட்காட்சி பொதுமக்களுக்கு பயனுள்ள வணிக மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை ஒருங்கிணைத்துள்ளதாக அவர் பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில்.....

 பேரருட்திரு பிரதீபன் லிபோன்ஸ், அருட்திரு அமல்ராஜ் அமிர்தநாதன், புனித சவேரியார் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அருட்திரு அமல்ராஜ் அமிர்தநாதன், சட்ட ஆலோசகர் A. செல்வின், தூத்துக்குடி பார் அசோசியேஷன் செயலாளர், தொமுச தொழில்சங்கம் ப்ளோரன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



குழந்தை மகிழ்ச்சியில் குதுகலிக்க விளையாட்டு உபகரணங்கள் 

OLS Friends Expo 2026 ஏற்பாட்டுத் தலைவர் K. டென்சிங், A.T.S. அருள் Ex MC, செயலாளர் A.P. நிர்மலா, பொருளாளர் மற்றும் OLS Friends பொருட்காட்சி குழுவினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பொருட்காட்சியில் வீட்டு உபயோகப் பொருட்கள், மின்சாதனங்கள், ஆடைகள், உணவக அரங்குகள், சிறுவர் விளையாட்டு அம்சங்கள், பல்வேறு வணிக நிறுவனங்களின் அரங்குகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. 


பனிமய மாதா திருவிழா நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த பொருட்காட்சியை பார்வையிடுவார்கள் என  ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக