செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடியில் ஸ்ரீஆலால சுந்தரவேத சிவாகம வித்யாலயம் ஸ்ரீபத்மாவதி குருகுலம் சார்பில் முப்பெரும் விழா அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

thoothukudi leaks 8-8-2023

த.சண்முகசுந்தரம்

மூத்த பத்திரிகையாளர்


தூத்துக்குடியில் ஸ்ரீஆலால சுந்தரவேத சிவாகம வித்யாலயம் ஸ்ரீபத்மாவதி குருகுலம் சார்பில் முப்பெரும் விழா அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

இது பற்றிய செய்தியாவது:-

     தூத்துக்குடி ஸ்ரீஆலால சுந்தரவேத சிவாகம வித்யாலயம் ஸ்ரீபத்மாவதி குருகுலம் சார்பில் முப்பெரும் விழா கடந்த ஞாயிறு அன்று தொடங்கியது. பத்மாவதி குருகுல கட்டடம் திறப்பு விழா, சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா மூன்று நாட்கள் நடைபெறுகின்றன.



    முதல்நாள் விழாவில் தருமை ஆதீனம் தலைமை தாங்கி கட்டிடத்தை திறந்து வைத்தார். கல்வெட்டு திறப்பு விழாவும் நடைபெற்றது. 


வேளாக்குறிச்சி ஆதீனம், பெரியநம்பி திருமாளிகை ஜீயர் சுவாமிகள் அருளாசி வழங்கினார்கள். 


பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் வேத சிவாகம வித்யாலயம் முதல்வர் பிச்சை குருக்கள், திருப்பரங்குன்றம் ஸ்கந்த குரு வித்யாலயம் முதல்வர் ராஜா பட்டர் ஆசியுரை வழங்கினார்கள்.



     தஞ்சாவூர் விரைவு நீதிமன்ற நீதிபதி முருகேசன் வாழ்த்துரை வழங்கி உண்மை விளக்கம் எனும் நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது. நூல் குறித்து தருமை ஆதீனப் புலவர் மதிவேலாயுதம் அறிமுகவுரை நிகழ்த்தினார். ஸ்ரீஆலால சுந்தர வேத சிவாகம வித்யாலயம் முதல்வர் செல்வம் பட்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் 


    இரண்டாம் நாள் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவிற்கு விகாஸரத்னா பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் வேத சிவாகம வித்யாலயம் முதல்வர் பிச்சை குருக்கள் தலைமை தாங்கினார். யு.எஸ்.ஏ ஹரிஹரன் முன்னிலை வகித்தார்.

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நிகழ்ச்சி யில் கலந்து பேசியதாவது :-


செல்வம் பட்டரை பொறுத்தவரை எந்த வேறுபாடும் பார்க்காமல் பழகுபவர் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் நல்லது நடக்க வேண்டும் என்று சிறந்த இறைபணியில் ஈடுபட்டு வருகிறார். 


நல்ல பழக்க வழக்கங்களின் மூலம் பாடசாலையில் ஒழுக்கமான முறையில் நல்ல ஆசீர்வாதம் வழங்கி வருகிறார். 


இதுபோன்ற நிகழ்வுகள் மனதிற்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கும். 


இறைவன் அருளாசியால் இறைபணி மூலம் பல்வேறு நிகழ்வுகளை செய்து வருகிறார். 


மக்களின் மகிழ்ச்சிக்கு அவரது ஆன்மீக பணிகளுக்கு எல்லோரும் ஆதரவை வழங்கி வருவதை போல் என்னுடைய ஆதரவும் எப்போதும் உண்டு என்று பேசினார்.

    வேதம் சிவாகமம் பயின்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி முதலாம் ஆண்டு பாடத்திட்ட தொகுப்பு வெளியிடப்பட்டது. 

இவ்விழாவில் இந்து சமய அறிநிலைய துறை இணை ஆணையர் அன்புமணி, சிவன்கோவில் நிர்வாக அலுவலர் தமிழ்ச்செல்வி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், வக்கீல் குபேர் இளம்பரிதி, முன்னாள் அறங்காவல குழு தலைவர் கோட்டுராஜா, சிவன்கோவில் பிரதோஷகமிட்டி தலைவர் ஆறுமுகம், முன்னாள் கவுன்சிலர்கள் கந்தசாமி, செந்தில்குமார், தெப்பக்குளம் மாரியம்மன்கோவில் அறங்கால குழு தலைவர் செல்வசித்ரா, அறங்காவல குழு உறுப்பினர்கள் பாலகுருசாமி, மகாராஜன், திமுக வட்டச்செயலாளர் முனியசாமி, கண்ணன்பட்டர், மற்றும் நாகலட்சுமி, பரமேஸ்வரி, உள்பட பலர் கலந்து கொண்டனர். 


அடுத்து நியூசிலாந்தை சேர்ந்த மணிகண்ட பட்டர் நன்றி கூறினார்.


அமைச்சருக்கு புகழாரம் ஆலால சுந்தரவேத சிவாகம வித்யாலயம் முதல்வர் செல்வம் பட்டர் வரவேற்புரையில் பேசும்போது ...


எந்த மத நிகழ்வாக இருந்தாலும் முழு மனதோடு கலந்து கொண்டு எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் எப்போதும் சொல்வார்கள். 


 ஆனால் எளிதில் எல்லோரும் சந்திக்கலாம். அனைவராலும் அவரை அன்போடு அழைப்பார்கள். 


அதேபோல் இந்த நிகழ்வுக்கு வரவேண்டும் என்று கேட்டவுடன் சரிஎன்று கூறினார்கள். 


இறைவன் தொடர்ந்து அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவதால் மாவட்ட செயலாளர் அமைச்சர் என்று நல்ல மதிப்போடு இன்று வரை தொடர்ந்து இருக்கிறார்கள். 


இனி வரும் காலங்களிலும் இது தொடரும். மனதார வாழ்த்துகிறேன் என்று பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக