thoothukudi leaks 8-8-2023
த.சண்முகசுந்தரம்
மூத்த பத்திரிகையாளர்
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பயிற்சிக் கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்றார்
இது பற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை பள்ளி மேலாண்மைக் குழுவின் சார்பாக தூத்துக்குடி நகர்புறம் மற்றும் ஊரக வளமையங்கள் இணைந்து நடத்திய உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. மேயர் ஜெகன் பெரியசாமி அதன் கையேடுகளை வழங்கி துவக்கி வைத்தார் .
பின்னர் மேயர் ஜெகன் பேசியதாவது -
தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தின் 21 பள்ளிகள் செயல்படுகின்றன.
அதற்கு தேவையான கட்டமைப்பு பணிகளை முழுமையாக செய்து கொடுத்து தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் பல நிகழ்வுகளில் கூறுவதை போல் கல்வியும் மருத்துவதுறையும் எனக்கு இருகண்கள் என்ற வழியை பின்பற்றும் வகையில் கல்வியை ஊக்குவித்து வருகிறோம் .
மேலும் தேவையான கட்டமைப்பு பணிகளை செய்து கொடுப்பதற்கும் தயாராக இருக்கிறோம் என்று பேசினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி சிறப்புரையாற்றினார்.
முன்னதாக உதவி திட்ட அலுவலர் முனியசாமி வரவேற்புரையாற்றினார்.
கூட்டத்தில் ஆசிரியர்கள் பயிற்றுநர்கள் இஸ்ரவேல், பாலையா, மற்றும் கலெக்டர் அலுவலகத்தை சேர்ந்த புவனேஸ்வரி ஆகியோர் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி, பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடுகள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
கூட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா, மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, கவுன்சிலர்கள் சந்திரபோஸ், கீதாமுருகேசன், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், தெய்வேந்திரன், சரவணக்குமார், ஜாக்குலின்ஜெயா, பேபிஏஞ்சலின், கற்பககனி, எடின்டா, முத்துமாரி, மும்தாஜ், வைதேகி, ஜெயசீலி, சரண்யா, சோமசுந்தரி, விஜயலட்சுமி, ஜெபஸ்டின்சுதா, பாப்பாத்தி, பொன்னப்பன், கண்ணன், இசக்கிராஜா, சுப்புலட்சுமி, ரிக்டா, தனலட்சுமி, ஜான்சிராணி, பவாணிமார்ஷல், கனகராஜ், வக்கீல் மந்திரமூர்த்தி, வெற்றிச்செல்வன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை மேற்பார்வையாளர்கள் சார்லஸ், பார்வதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜசெல்வி, கிருஷ்ணவேணி, ஆசிரியர் பயிற்றுநர் மேடைபாண்டி, செல்வி, ஆகியோர் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக