சனி, 5 ஆகஸ்ட், 2023

பெண்கள் உண்மை தகவல் களை மறைத்தால் சட்ட படி நடவடிக்கை ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் உறுதிமொழி உஷாராக இருங்க!!!

thoothukudi leaks 5-8-2023

நீங்கள் அசால்ட் ஆக பொய் சொல்லாதீங்க ?ரூ.1000 உரிமைத் தொகை விண்ணப்பத்தின் கடைசி வரியை படிச்சீங்களா? உண்மை யை மறைத்தால் பெரும் சிக்கல் வந்து சேரும் ...!!!



இதுபற்றி செய்தியாவது:-

 ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விண்ணப்பப் படிவத்தில் உள்ள 11 உறுதிமொழிகள் குறிப்பிடப்பட்டு கையெழுத்து பெறப்படுகிறது.


தற்போது திமுக அரசின் ஸ்டார் திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் பெறும் பணி நடைபெற்று வருகிறது. 

விண்ணப்ப த்தில் கலைஞர் கருணாநிதி கொண்டு வந்த கைம்பெண் என சொற்களுக்கு பதிலாக விதவை என குறிப்பிட்டுள்ளார் கள் 


இன்று முதல் 2 ஆம் கட்ட முகாம்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 


செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் வழங்கப்படும் இந்த உரிமைத் தொகையை பெற பல்வேறு நிபந்தனைகளை அரசு விதித்து உள்ளது.


அதன் அடிப்படையில் விண்ணப்ப படிவத்தில் உறுதிமொழிகளை தமிழ்நாடு அரசு குறிப்பிட்டு உள்ளது.


1. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற எனது ஆதார் எண், பயோமெட்ரிக் அல்லது ஒரு முறை கடவுச்சொல் (OTP) தரவை ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்புக்காக வழங்க நான் இதன் மூலம் ஒப்புக்கொள்கிறேன்.


2. எனது குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்திற்கு மேல் இல்லை.


3. எனது குடும்ப உறுப்பினர்கள் எவரும் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 இலட்சதிற்கு மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள் அல்ல.


4. எனது குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சம் ஈட்டி தொழில் வரி செலுத்துவோர் யாரும் இல்லை.


5. எனது குடும்பத்தில் மாநில அரசு, ஒன்றிய அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் யாரும் இல்லை.


6. எனது குடும்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி வார்டு உறுப்பினர்களைத் தவிர) யாரும் இல்லை.


7. எனது குடும்பத்தில் யாரும் சொந்தப் பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கவில்லை.


8. எனது குடும்பத்தில் ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை செய்து (Annual turnover) சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள் யாரும் இல்லை.


9. எனது குடும்பத்தில் முதியோர் ஓய்வூதியம் (OAP) விதவை ஓய்வூதியம், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லை.


10. எனது குடும்ப உறுப்பினர்களுக்குக் கூட்டாக 5 ஏக்கர் நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலம் இல்லை.


11. விண்ணப்பத்தில் என்னால் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் உண்மை. தவறான தகவல்களைக் கொடுத்து கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற்றது கண்டறியப்பட்டால், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறிவேன்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக