thoothukudi leaks 4-8-2023
செய்தி புகைப்படங்கள்
த.சண்முகசுந்தரம்
மூத்த பத்திரிகையாளர்
தூத்துக்குடி மீனவர்களுக்கு உபகரண பொருட்கள் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
இது பற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு வார்டாக பொதுமக்களை சந்தித்து அமைச்சர் கீதாஜீவன் குறைகளை கேட்டறிந்து அதிகாரிகளுடன் இணைந்து அதை நிவர்த்தி செய்து வருகிறார்.
திரேஸ்புரம் பகுதியில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சியில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த பெண்கள் வியாபாரம் செய்வதற்கு உபகரணங்கள் வழங்க வேண்டும். என்று கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக கலைஞர் அரங்கில் மீனவர்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் திரேஸ்புரம் அண்ணா காலணியில் உள்ள மீனவபெண்களுக்கு ஒரு லட்சம் மதிப்பீல் 10 மீனவர்களுக்கு பெரிய அலுமினிய டப்பு, அலுமினிய பேஷன், குளிர்பதனம் செய்வதற்கு பெரிய பிளாஸ்டிக் பதப்படுத்தும் டப்பா, உள்ளிட்ட 3 வகையான உபகரணங்களை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கி நல்லமுறையில் மீன்வியாபாரங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர் ரவி, பகுதி பொருளாளர் உலகநாதன், மற்றும் கருணா, மணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக