திங்கள், 25 ஜூலை, 2022

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு காவல்துறை அவசர தொலைபேசி எண்களான 100 மற்றும் மாவட்ட காவல் கட்டுபாட்டு அறை எண் 95141 44100 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்

 தூத்துக்குடி லீக்ஸ்: 25.07.2022

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு - திருட்டு, செயின் பறிப்பு போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க சாதாரண உடையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பொதுமக்களோடு மக்களாக கலந்து பணியில் ஈடுபடுவார்கள் - குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் தலைமையில் ஆலோசனை கூட்டம்.


இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா  (26.07.2022)  தொடங்கி வரும் 05.08.2022 அன்று வரை  நடைபெற உள்ளது. 


பனிமய மாதா திருவிழா 26-7-2022 செவ்வாய் காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது. 


இதனை முன்னிட்டு மாவட்ட காவல்துறை சார்பாக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று (25.07.2022) பனிமய மாதா ஆலய வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன்  தலைமையில் நடைபெற்றது. இதில் போலீசார் பாதுகாப்பு பணிகள் குறித்து அறிவுரை வழங்கினார்.

ஆலோசனை கூட்டம் 


இந்த பனிமய மாதா கோவில் திருவிழா பாதுகாப்பு பணிக்கு 3 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். திருட்டு, செயின் பறிப்பு போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள், பழைய குற்றவாளிகள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை ரகசியமாக கண்காணிக்க 100க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் போலீசார் சாதாரண உடையில் பொதுமக்களோடு மக்களாக கலந்து ஆங்காங்கே தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஆங்காங்கே சிசிடிவி மேராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிக அளவில் தங்க ஆபரணங்களை அணிந்து வரவேண்டாம், தங்களது குழந்தைகளையும், உடமைகளையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும், மேலும் தங்க நகைகளை அணியும்போது உடைகளுடன் சேர்த்து ஊக்கு போன்றவற்றால் பின் செய்து பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். மேற்படி குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தவிர்க்க காவல்றையினர் ஒலிப்பெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். 


பொதுமக்கள் தங்களது குழந்தைகளையோ, பொருட்களையோ தவறவிட்டால் உடனடியாக மாதா கோவில் வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம். 


மேலும் இந்த கூட்டத்தை பயன்படுத்தி யாராவாது திருட்டு மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக பொதுமக்களுக்கு தெரியவந்தால் உடனடியாக காவல்துறை அவசர தொலைபேசி எண்களான 100 மற்றும் மாவட்ட காவல் கட்டுபாட்டு அறை எண் 95141 44100 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம், அவ்வாறு தகவல்கள் தருபவர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். 


பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அமைதியான முறையில் வழிபட்டு செல்வதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனவும், குற்ற சம்பவங்கள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.


 இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கு தந்தை குமாரராஜா, தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ், காவல் துணை கண்காணிப்பாளர்கள் மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு பிரேமானந்தன், மாவட்ட குற்ற பிரிவு ஜெயராம், மணியாச்சி சங்கர், பயிற்சி காவல் துணை  கண்காணிப்பாளர் கணேஷ்குமார் உட்பட காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக