பிஜேபி கட்சியினர் தூத்துக்குடியில் புது வித டிரெண்ட் - ஜ ஆரம்பித்து உள்ளார்கள்.
அதையே அப்படியே மற்ற அரசியல் கட்சிகள் ஃப்லோ பண்ண தொடங்கியுள்ளார்கள்.
![]() |
| பிஜேபி |
![]() |
| நாற்காலியில் அமர்ந்து இருப்பவர்கள் மறைத்து படி கீழே நீண்ட பேனர் கட்டப்பட்டது... |
இது பற்றிய சுவாரஸிய செய்தியாவது -தூத்துக்குடி லீக்ஸ் 25-07-2022
பொதுவாக ஆளும் கட்சி மற்றும் அதிகாரிகளை கண்டித்தோ ஆர்ப்பார்ட்டம் போராட்டம் நடத்துபவர்கள் காவல் துறை குறிப்பிட்ட இடங்களில் கட்சிதொண்டர்கள் கட்சி கொடி வாசகம் எழுதிய பதாகை ஏந்தி ஆக்ரோஷமாக வந்திருக்கும் அனைவரும் கோஷம் எழுப்பி அவர்களுடன் மாவட்ட தலைவர்களும் நீண்ட பேனர் அருகே முதல் வரிசையில் நின்றவாறு ஆர்ப்பாட்டம் சில மணி நேரம் நடத்திவிட்டு கலைந்தும் சில வேளைகளில் சாலையில் அமர்ந்தும்? காவல்துறை கைது நடவடிக்கையும் செய்வார்கள்.
இது தூத்துக்குடியில் 23-07-2022 அன்று வரை ...
இதுவே வழக்கமாக கண்டிப்பு - ஆர்ப்பாட்டம் என்றிருந்தார்கள்.
கடந்த சனிக்கிழமை 23-07-2022 தூத்துக்குடியில் 12-வது வாசல் மையவாடி எதிராக அமைந்துள்ள காலி மைதானத்தில் .... தமிழக அரசின் மின் உயர்வு கட்டணம் கண்டித்து தூத்துக்குடி பிஜேபி-யினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்
அப்பகுதியில் நிழலுக்காக நீண்ட பந்தல் அமைத்து அதில் வரிசையாக மகளிர் கள் மற்றும் தொண்டர்கள் நாற்காலியில் ரொம்ப ஹாயாக அமர்ந்து வாசக பதாகை களை உயர்த்தி படி ?!தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பார்ட்டம் நிகழ்த்தினர்கள். நாற்காலியில் அமர்ந்து இருப்பது போட்டோ வில் தெரியாதவாறு நீண்ட பேனரை கீழ் வரிசை யில் கட்டி மறைந்திருந்தார்கள்.
பிஜேபி வேற லெவல்
தொலைதூரம் வந்து கலந்து கொண்டவர்கள் மதிய உணவு அருந்திய பின்பே சென்றார்கள்.
இதை உற்று பார்த்து கடந்த சென்ற பொது மக்கள் - மற்றும் கொளுத்தும் வெயில் நின்ற போலீஸ் - நிருபர்களுக்கு இப்போது நடைபெறுவது உண்ணாவிரத மா ? ஆர்ப்பாட்டமா?பொதுகூட்டமா? என அட்மாஸ்பியரை பார்த்து ஆச்சிரியம் அடைந்தார்கள்.
அட இது கூட நல்லதாக இருக்குல்ல பிஜேபி - ன் புது டிரென்ட் ஆர்ப்பார்ட்டம்
ஆனால் இதில் ஆர்ப்பாட்டத்தின் உணர்வு மட்டும் மிஸ்ஸிங் ஆகிறது.
இந்நிகழ்வு தூத்துக்குடி மாவட்ட அரசியல் கட்சிகள் மத்தியில் பெருந் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இன்று 25-07-2022 தூத்துக்குடி அதிமுகவினர் அதே பாணி நாற்காலியில் மகளிர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அமர மேடையில் கட்சி தலைவர்கள் மட்டும் நின்று கொண்டிருந்தார்கள்.
![]() |
| இன்று 25-7-2022 அதிமுக ஆர்ப்பாட்டத்திலும் புது டிரெண்ட் சேர் நாற்காலிகள் போடப்பட்டிருந்தது?! |
கீப் இட் அப் -
நடிகர் வடிவேலு 23 ம் புலிகேசி மைன்ட் வாய்ஸ்-ல்
தூத்துக்குடி ஆர்ப்பாட்டம் வரலாறு முக்கியம் மந்திரியா ரே?
தூத்துக்குடி லீக்ஸ் பதிவு
செய்தியாளர் அருணன்





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக