அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு அனுமன் தீர்த்தம் இன்று (19-1-2024) அனுப்பப்பட்டது.
உத்திர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் பல சட்ட போராட்டங்களுக்கு பிறகு தற்போது சிறந்த முறையில் கட்டப்பட்டு வருகிறது.
இந்த ராமர் கோயில் கும்பாபிஷேகம் வருகின்ற 22.01.2024 அன்று நடைபெற உள்ளது.
இந்த கோயில் கும்பாபிஷேகத்திற்கு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மிகவும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ராமேஸ்வரம் கடலில் இருந்து புனித நீரானது அனுமன் தீர்த்தமும் , இராமேஸ்வரம் மண்ணும் எடுத்து அயோத்தி ராமர் கோயிலுக்கு அனுப்பப்பட்டது.
அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் படி மாநில செயலாளர் P M சரவணன் ஜி தலைமையில் மாநில இணைச் செயலாளர் K சிவகுமார் , ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் புனிதா ஶ்ரீ , மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் V.முருகவள்ளி , மாவட்ட மகளிர் இணைச் செயலாளர் G முத்துலட்சுமி , மாவட்ட துணை செயலாளர் R.சசிகுமார் ஆகிய
பொறுப்பாளர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக