வியாழன், 18 ஜனவரி, 2024

விசைபடகு மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை சிறைபிடிப்பு மத்திய மாநில அரசுகள் மீட்க வலியுறுத்திமீனவர்கள் ஆலோசனை கூட்டம்

thoothukudi leaks 19-1-2024

photo news by john posco reporter 

பாம்பன் துறைமுகத்தில் இருந்து 16/1/2024 அன்று மீன்பிடிக்க சென்ற இரண்டு விசைப்படகு மற்றும் 18 மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடிப்பு மீனவரகள் மத்தியில் பதற்றம் தொற்றியுள்ளது.


பாம்பன் ஆலய வளாகம்


 இது பற்றிய செய்தியாவது

பாம்பன் துறைமுகத்தில் இருந்து

மீன்பிடிக்க சென்ற இரண்டு விசைப்படகு மற்றும் 18 மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளனர்

உடனே 18 மீனவர்களை மத்திய மாநில அரசுகள்  மீட்க வலியுறுத்தி தாசன் மற்றும் பேட்ரிக் ஆகியோர் தலைமையில் ரே நேற்று 18/1/2024 காலை 11 மணிக்கு பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன..

1, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 18 இந்திய மீனவர்களையும் இரண்டு விசைப்படகுகளையும் மீட்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

2, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 18 இந்திய மீனவர்களையும் இரண்டு விசைப்படகுகளையும் மீட்க மக்களைத் திரட்டி வெகுஜன போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

3, பாம்பன் ஆரோக்கிய மாத ஆலய வளாகத்தில் ஊர்கூடி போராட்டம் வடிவம் குறித்து முடிவு செய்வதென தீர்மானிக்கப்பட்டது.

        இதில் 100க்கு மேற்பட்ட விசைப்படகு உரிமையாளர்களும், மீனவ தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக