புதன், 18 டிசம்பர், 2024

அசத்தல் அமைச்சர் கீதா ஜீவனுக்கு பொதுமக்கள் மனதார பாராட்டு

Tamil Nadu updates,

Photo news by

Arunan journalist 

தூத்துக்குடி, டிச. 19:

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார் அறை அருகே அமர்ந்திருந்த 70 வயதான மூதாட்டி மெகருன்னிஷா, வழி தெரியாமல் புலம்பிக் அழுது கொண்டிருந்தார்.



மூதாட்டி அழுகை

 தல்லாகுளம் பெருமாள் கோயில் அருகே வீடு என கூறிய அவர், அடையாளம் தெரிந்தவர்கள் அழைத்து செல்லுமாறு கோரிக்கை விடுத்தார்.

அமைச்சர் கீதா ஜீவன் துரித உதவி 

இந்த தகவல் சமூக நலன் மற்றும் உரிமைத் துறை அமைச்சர் மாண்புமிகு கீதா ஜீவன் அவர்களிடம் வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கப்பட்டது.



உடன் சம்பவ இடத்திற்கு.... அனுப்பி வைத்த அமைச்சர் கீதா ஜீவன் 

 தகவலை உடனடியாக கவனித்த அமைச்சர், தனது உதவியாளர் கல்யாணி அருண் ஆகியோரை சம்பவ இடத்திற்கு அனுப்பினார்.



அவர்கள் மூதாட்டியை ஆட்டோவில் ஏற்றி, பாதுகாப்பாக முதியோர் இல்லத்தில் சேர்த்தனர்.


 மனிதாபிமானத்துடன் செயல்பட்ட அமைச்சர் கீதா ஜீவன்  அவருடைய குழுவின் உதவி, பொதுமக்கள் மற்றும் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பஸ் பயணிகளிடம் பெருமையான பாராட்டுகளை பெற்றது.


இந்த நிகழ்வு, அமைச்சரின் தன்னலமற்ற பணியினையும், சமூகத்தின் நலனுக்கு அவர் அளிக்கும் முக்கியத்துவத்தையும் காட்டுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக