Tamil Nadu updates,19-12-2024
Photo news by Arunan journalist
அமித்ஷா மீது அவதூறு பிரச்சாரம்: திமுக கூட்டணி கட்சிகள் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட முயற்சி - பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் அறிக்கை விடுத்துள்ளார்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு சமூக நீதி, ஒருமைப்பாடு மற்றும் வளர்ச்சியை முன்னெடுத்து செயல்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் திட்டமிட்ட முறையில் கலவரத்தை தூண்ட முயற்சி செய்து வருவதாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கையில், "பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களால் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டத்தைக் கொண்டாடும் மத்திய பாஜக அரசு, நாடு முழுவதும் சமூக நீதிக்கான மாற்றங்களை முன்னெடுத்துச் செல்கிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் வழிநடத்தலில், 370-வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டது போன்ற வரலாற்று நிகழ்வுகளைச் சாதனையாக கொண்ட பாஜக அரசின் செயல்பாடுகள், எதிர்க்கட்சிகளுக்கு ஏற்றுக் கொள்ள முடியாததாக உள்ளது.
தற்போது, அமித்ஷா அவர்கள் அம்பேத்கர் குறித்து தவறாக பேசியதாக அவதூறு பிரசாரம் மேற்கொண்டு, நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியின் 18 கட்சிகள் செயல்பட்டு வருகின்றன," எனக் கூறியுள்ளார்.
இதேபோல், தமிழகத்தில் திமுக கூட்டணியினர் கலவரத்தை தூண்டும் வகையில் போராட்டங்களை நடத்தி, மக்களை முடக்கியது வெட்கக்கேடானது என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
கலவர முயற்சிகளை முறியடிக்கப்படும்
"மத்திய பாஜக அரசு, நாடாளுமன்றத்தில் "ஒரே நாடு ஒரே தேர்தல்" மசோதாக்களை நிறைவேற்றுவதை தடுக்க எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் சதிகளையும் அவதூறு பிரச்சாரங்களையும் இந்திய மக்களின் ஆதரவுடன் முறியடிக்கும். அமித்ஷா அவர்களுக்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் மேற்கொள்ளும் பொய்ப் பிரசாரத்துக்கு சட்டப்படி பதிலடி கொடுக்கப்படும்," என ஏ.என்.எஸ். பிரசாத் கூறினார்.
அவரது அறிக்கையின் இறுதியில், "காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் தொடர்ச்சியாக மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. எதிர்காலத்தில் மக்களுக்கே நியாயம் கிடைக்கும்," என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
ஏ.என்.எஸ். பிரசாத்,
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக