புதன், 17 ஏப்ரல், 2024

ஜனநாயக ஆட்சி மலர இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். தூத்துக்குடி பிரச்சாரத்தில் கனிமொழி பேச்சு

ஜனநாயக ஆட்சி மலர இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். தூத்துக்குடி பிரச்சாரத்தில் கனிமொழி பேச்சு



      தூத்துக்குடி இந்தியாவின் 17வது மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டமாக நடைபெறுகிறது.

 தமிழகத்தில் ஓரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி 39 தொகுதிகளுக்கும் வாக்குபதிவு நடைபெறுகிறது.


 17ம்தேதி மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவு பெற இருப்பதால் தமிழகத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தங்களுக்குாிய சின்னத்திற்கு வாக்கு சேகாித்து வருகின்றனா். 

இந்நிலையில் வடக்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட பாத்திமாநகர், தெற்கு காட்டன் ரோடு, 2ம் கேட், அழகேசபுரம், வட்டக்ேகாவில், மேட்டுப்பட்டி, ஆகிய இடங்களில் திமுக வேட்பாளராக போட்டியிடும்

 கனிமொழி தூத்துக்குடியில்

தனக்கு வாக்கு சேகாித்து பேசியதாவது:-

 தூத்துக்குடி எனக்கு இரண்டாம் தாய்வீடு உங்களை நம்பி நான் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறேன். கடந்த காலத்தில் கொரோனா காலக்கட்டம் இருந்தபோது பிரதமர்மோடி லைட்டை அனைத்து விட்டு கையை தட்டுங்கள்


 கொரோனா பறந்து விடும் என்று கூறினார். ஆனால் நம்முடைய முதலமைச்சர் எல்லோருக்கும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறி அதை தீர்த்து வைத்தார். 


இன்று நீங்கள் தட்டும் இந்த கைதட்டு தான் அவர்களுக்கு வைக்கும் வேட்டாக இருக்க வேண்டும்.

 ராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர்கள் மாநாட்டில் நீங்கள் வைத்த அனைத்து கோாிக்கைகளும் முதலமைச்சரால் நிறைவேற்றப்பட்டு மீன்பிடி தடைகாலத்தில் வழங்கப்பட்ட உதவித்தொகை 5 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. கல்லூாியில் படிப்பதற்கு 5 சதவீத இடஓதுக்கீடு திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. இந்தியாவில் நடைபெறும் சா்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து இந்த நாட்டை நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டும். ஜனநாயகம் மலர்ந்து அனைவரையும் மதித்து நடக்கும் அரசு அமைய வேண்டும். முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றியுள்ளார். அதிலும் குறிப்பாக இலவச பேருந்து பயணம், ஓருகோடியே 15 லட்சம் பேருக்கு ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. விடுபட்டவர்களுக்கும் தோ்தல் முடிவுக்கு பின் முகாம் நடத்தி அவர்களுக்கும் வழங்கப்படும். இந்தியா கூட்டணி அரசு அமைந்ததும். கேஸ் விலை 500க்கும், பெட்ரோல் 75க்கும், டிசல் 65க்கும் வழங்கப்படும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியதை போல் தகுதியுள்ள பெண்கள் அனைவருக்கும் ஆண்டுக்கு ஓரு லட்சம் வழங்கப்படும். என்று கூறியுள்ளது. அதுவும் நிறைவேற்றப்படும். ஏப்ரல் 19 தேர்தல் நாளன்று முதல் பெயருடன் கூடிய உதயசூரியன் சின்னம் பட்டணை அளுத்தி உங்களது வாக்குாிமையை செலுத்த வேண்டும். உங்களுக்காக பணியாற்ற மீண்டும் வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டுக்கொண்டார். 

     வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துைற அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பொியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ, துணை மேயர் ஜெனிட்டா, முன்னாள் எம்எல்ஏ டேவிட்செல்வின், மாநில காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சண்முகம், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட திமுக அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மீனவரணி அமைப்பாளர் அந்ேதாணிஸ்டாலின், மாவட்ட மருத்தவ அணி தலைவர் அருண்குமார், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், பிரபு, ஜான்சன், ஜேசையா, பார்வதி, மாவட்ட பிரதிநிதிகள் சோ்மபாண்டியன், நாராயணன், சக்திவேல்,மாநில பேச்சாளார்கள் சரத்பாலா, இருதயராஜ், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன்ஜேக்கப், அருண்சுந்தா், கிறிஸ்டோபர் விஜயராஜ், முருகஇசக்கி, சாகுல்ஹமீது, டேனி, துணை அமைப்பாளர்கள் பால்ராஜ், மகேஸ்வரன்சிங், வினோத், பிரபாகர், கருப்பசாமி, செல்வி, நாராயணவடிவு, சந்தனமாாி, பழனி, சங்கர், ஆர்தர்மச்சாது, பெல்லா, தொழிற்சங்க செயலாளர் மாியதாஸ், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மேகநாதன், கவுன்சிலர்கள் தெய்வேந்திரன், கற்பககனி, நாகேஸ்வாி, அந்தோணிபிரகாஷ் மார்ஷலின், ஜான்சிராணி, ரெக்ஸ்லின், ாிக்டா, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சுரேஷ்குமாா், அரசு வழக்கறிஞர்கள் சுபேந்திரன், மாலாதேவி, வட்டச்செயலாளர்கள் லியோஜான்சன், டென்சிங், சதீஷ்குமார், முனியசாமி, அசோக்குமாா், சக்கரைசாமி, தினகர், சந்தனமாாிமுத்து, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், புஷ்பராஜ், பேச்சிமுத்து, மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர். மக்கள் நீதிமய்யம் மாவட்ட செயலாளர் ஜவஹா், துணைச்செயலாளர் அக்பர், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், மாநகர மதிமுக செயலாளர் முருகபூபதி, இளைஞர் அணி செயலாளர் சரவணபெருமாள், முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் அருள், காங்கிரஸ் நிா்வாகிகள் சேகா், கோபால், நிர்மல்கிறிஸ்டோபர், விஜயராஜ், சூசை வியாகுலம், செல்வராஜ், விஜயராஜ், உள்பட இந்தியா கூட்டணியை சோ்ந்த பலர் கலந்து கொண்டனர். 


பிரச்சாரத்திற்கு சென்ற இடங்களில் 8 இடத்தில் 50 கிலோ எடை கொண்ட மாலைகளை வெற்றி திருமகளே வருக என்று கூறி மாலை அணிவித்தனர். 


சில இடங்களில் வெற்றி பெற்றுள்ள உங்களுக்கு நாங்கள் வாழ்த்து சொல்ல தான் வந்துள்ளோம் என்று மக்கள் கூறியதும். கனிமொழி பிரச்சாரம் செய்ய வேண்டமா என்று கேட்டார். அதற்கு நமது சாதனைகள் எல்லோருக்கும் தொியும் எதிர்கட்சிகளின் வேதனைகளை மட்டும் நாட்டு மக்களுக்கு எடுத்துச்சொல்லுங்கள் என்று உரக்க குரலிட்டனர். 

 பல இடங்களில் உற்சாகமான பொதுமக்கள் வரவேற்பையும் வழங்கினார்கள்.

போட்டோ தகவல் 

த.சண்முகசுந்தரம் 

முத்த பத்திரிகையாளர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக