திங்கள், 24 ஜூன், 2024

மன உளைச்சலில் அரசு மருத்துவர்கள் திமுக அரசு தீர்வு தருமா?தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார்

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 24-6-2024 photo news 

by arunan journalist 

டாக்டர் பெருமாள் பிள்ளை உள்ளிட்ட 8 மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்...


"அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை 6 வாரங்களுக்குள் பரிசீலித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பை உடனடியாக திமுக அரசு செயல்படுத்த வேண்டும் என்று 

தமிழக பாஜக  செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்  அறிக்கை வெளியிட்டுள்ளார் .

இது பற்றிய செய்தியாவது:-


அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்


அரசு மருத்துவர்களை மனஉளைச்சலுடன் போராட்டத்திற்கு தள்ளினால் ஏழை, எளிய மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள்



கடந்த அதிமுக ஆட்சியில், 2019 அக்டோபரில், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு  தொடர் போராட்டங்களை நடத்தியது. 

மருத்துவர்கள் போராட்டம்!!!

அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த, இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின், போராட்டக் களத்திற்கு நேரில் வந்து அவர்களுடன் தரையில் அமர்ந்து, "அரசு மருத்துவர்கள் தங்களை வருத்திக் கொள்ள வேண்டாம்.


 திமுக ஆட்சிக்கு வந்ததும் உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று உறுதி அளித்தார் 


அப்போது ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்...

 "அனைத்து அரசு மருத்துவர் சங்கங்களின் போராட்டக் கோரிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் - அதிகாரிகளும், பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாள்வதுடன், பிரேக்-இன்-சர்வீஸ் - நன்னடத்தைச் சான்றிதழில் கை வைப்பது, பணியிட மாற்றம் போன்ற நடவடிக்கைகள் ஈடுபடுவது கொடுங்கோன்மை! மருத்துவர்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தை காவல்துறை மூலம் ஒடுக்கிவிடலாம் என நினைக்காமல், நோயாளிகள் நிலை உணர்ந்து மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதே அரசின் கடமையாகும்" என கூறியிருந்தார்.


ஆனால்...?

2021 மே 7-ம் தேதி திமுக ஆட்சிக்கு வந்ததும், 2019-ல் அவர் என்ன வாக்குறுதி அளித்தாரோ..!!!

 அதில் ஒன்றைக்கூட செய்யவில்லை...? அன்று எதை 'கொடுங்கோன்மை' என்று சொன்னாரோ, அதை திமுக ஆட்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார்.


மன உளைச்சலில்..

 தங்கள் உரிமைகளுக்காக போராடும் அரசு மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்து, அவர்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு. 


அரசு மருத்துவர்கள் சிறப்பாக செயல்படுவதால் தான், சுகாதாரத் துறையில் தமிழகம் மற்ற மாநிலங்களை விட முன்னணியில் இருக்கிறது. 


சுகாதாரத் துறையில் தமிழகம் அடைந்திருக்கும் வளர்ச்சியை தங்களின் சாதனை என்று கூறிக் கொள்ளும் திமுக அரசு, அதற்கு காரணமான அரசு மருத்துவர்களை பழிவாங்கி வருகிறது.


 அவர்களுக்கான அடிப்படை உரிமைகளைக்கூட மறுக்கிறது. 


தீர்ப்பு 

திமுக அரசை முதல்வர் மு க ஸ்டாலினை பெரிதும் நம்பிய அரசு மருத்துவர்களுக்கு பெரும் துரோகத்தை திமுக செய்து வருகிறது.


அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை உள்ளிட்ட 8 மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த  சென்னை உயர் நீதிமன்றம்...

"அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை 6 வாரங்களுக்குள் பரிசீலித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளது.


 இந்த தீர்ப்பை உடனடியாக திமுக அரசு செயல்படுத்த வேண்டும்


எம்பிபிஎஸ் மற்றும் முதுநிலை படிப்பு என நீண்ட காலம் தங்களை வருத்திக்கொண்டு படிப்பதோடு, பயிற்சி டாக்டராக தங்கள் பணியை துவக்கி, அரசு பணியில் சேர்ந்து நிர்வாக ரீதியாக பல சவால்களை எதிர்கொண்டு ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்து வரும் டாக்டர்களுக்கு நியாயமான ஊதிய உயர்வு தர அரசு மறுப்பது அநீதி.


மேலும் மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் டாக்டர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட, தமிழக டாக்டர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் குறைவாக வழங்கப்பட்டும் தங்கள் பணியை பணியை சிறப்பாக செய்து வருகிறார்கள். 


அரசு மருத்துவர்கள் மன நிம்மதியுடன் இருந்தால் தான் நோயாளிகளுக்கு நல்ல சிகிச்சை கிடைக்கும்.


 அரசு மருத்துவர்களை மன உளைச்சலுடன் போராடும் அளவுக்கு தள்ளினால், சாதாரண ஏழை, எளிய மக்கள்தான் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். 


ஏழை எளிய மக்களின் ஒரே புகலிடம் அரசு மருத்துவமனைகள் தான். 



கொரோனா காலத்தில்...

மனித நேயத்திற்கு இலக்கணமாக செயல்பட்டு அரசு மருத்துவர்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் 

உணர்வுடன் தங்கள் கடமையை முழுமையாக செய்ததால் தான்

பல கோடி மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன. 


கொரோனா காலத்தில் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் அன்றைய அதிமுக அரசின் நிர்வாக சீர்கேட்டால்

ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் கோடி கோடியாக கொள்ளையடித்தன.

பல தனியார் மருத்துவமனை

நிர்வாகத்தினர் உயிருக்கு பயந்து தங்கள் மருத்துவமனைகளை மூடிவிட்டனர்.


ஆனால் அரசு மருத்துவமனைகள்

உயிர் கொல்லி நோய் கொரோனாவால் 

மக்கள் பாதிக்கப்பட்டபோது,

தங்கள் குடும்பத்தினரின் உயிரைப் பற்றி கவலைப்படாமல், தொடர்ந்து பல நாட்கள் வீடுகளுக்கே செல்லாமல், உயிரை துர்ச்சமான மதித்து 24 மணி நேரமும் , தமிழக மக்களுக்காக சேவை செய்ததை

திமுக அரசும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் உணர வேண்டும். 


மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தங்கள் இன்னுரை இழந்த தமிழக அரசு மருத்துவர்கள் 11 பேருக்கு மத்திய மோடி அரசு தலா 50 லட்சம் ரூபாய் அவர்கள் குடும்பத்திற்கு அளித்தது . 


ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்  கொரோனாவால் உயிரிழந்த அரசு  மருத்துவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி நிதி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்றெல்லாம்  கொடுத்த வாக்குறுதியை மறந்துவிட்டார். வழக்கம்போல காற்றில் பறக்க விட்டார்.


திமுக அரசு பதவி ஏற்றதில் இருந்து இன்று வரை.... கொரோனா காலத்தில் சேவை செய்து உயிரிழந்த தமிழகத்தின் 11 மருத்துவர்களுக்கு 

அரசு சார்பாக எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை. 


அந்த 11 மருத்துவர்களுக்கும் தமிழக அரசு தல 50 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும்.

அவர்களுடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கொரோனா சேவையில் உயிரிழந்த கபள்ளிப்பட்டு

மருத்துவர் விவேகானந்தன் குடும்பத்தைச் சேர்ந்த அவருடைய மனைவி திவ்யா தமிழக அரசிடம் விண்ணப்பித்து இன்று வரை வேலை வழங்கப்படவில்லை


கருணை அடிப்படையில் கோவிட்டால் உயிழந்த அரசு மருத்துவரின் மனைவிக்கு வேலை

வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும்

தமிழக அரசு செவி சாய்க்கவில்லை.


கோவிட்டால் உயிழந்த முன் களப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தரப்படுவதாக அரசே தனது பிரமாணத்தில் (Counter affidavit) ஒப்புக் கொண்டது. மேலும்

கருணை அடிப்படையில் கொரோனா தொற்றால் உயிழந்த அரசு மருத்துவரின் மனைவிக்கு வேலை

வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும்

தமிழக அரசு செவி சாய்க்கவில்லை

விவேகானந்தன் இறந்து மூன்று வருடங்களாகியும் எந்தவித அரசு நிவாரணமும் தரப்படவில்லை.


அன்றைய கொரோனா உயிர் கொல்லி நோய் தொற்று முதல் தற்போது 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவது வரை தொடர்ந்து பேரிடர் காலத்தில் களப்பணியாற்றும் அரசு 

மருத்துவர்களுக்கு, அவர்களின் நீண்ட கால சேவையை பாராட்டும் விதமாக, அவள் நீண்ட கால கோரிக்கையான ஊதிய உயர்வை உடனே அமல்படுத்த வேண்டும்.


அரசு மருத்துவர்களின் நீண்ட கால கோரிக்கையை மேலும் தாமதப்படுத்தி மற்ற அரசு ஊழியர் சங்கங்களை போல், மருத்துவர்களையும் போராட்டத்திற்கு தூண்டாமல் நடப்பு சட்டமன்ற தொடரிலேயே மருத்துவர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் 


ஏ.என்.எஸ்.பிரசாத் 

தமிழக பாஜக

மாநில செய்தி தொடர்பாளர் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக