ஞாயிறு, 23 ஜூன், 2024

ஸ்டாலின் அரசை கண்டித்து தூத்துக்குடியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் சுட்டெரிக்கும் வெயில் சுருண்டு விழந்த மூதாட்டி

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 24-6-2024 photo news 

by arunan journalist 

ஸ்டாலின் அரசை கண்டித்து தூத்துக்குடியில் அதிமுகவினர் கண்டன ஆர்பாட்டம்

இது பற்றிய செய்தியாவது:-

தமிழகம் முழுவதும் 
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்து இன்று அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்


 தூத்துக்குடி வடக்கு தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 

தூத்துக்குடி 12- வது வாசல் மையவாடி எதிர் புறமுள்ள மைதானத்தில் இன்று(24-6-2024) காலை 10 .30 மணியளவில் தொடங்கியது.

தூத்துக்குடி அதிமுக மாவட்ட செயலாளர் கள் முன்னாள் அமைச்சர்  கடம்பூர் ராஜு எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது .


ஆர்ப்பாட்டத்தில்... முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன், முன்னாள் எம்எல்ஏக்கள் மோகன், சின்னப்பன்,அமைப்பு செயலாளர் சின்னத்துரை,முன்னாள் மத்திய கூட்டுறவு சங்கம் தலைவர் சுதாகர், முன்னாள் மேயர் அந்தோனி கிரேஸி, முன்னாள் சேர்மன் ஹென்றி,பகுதி செயலாளர் ஜெய்கணேஷ்,முன்னாள் கவுன்சிலர் செண்பகம் செல்வன், இலக்கிய அணி செயலாளர் ஜான்சன் தேவராஜ், எம்ஜிஆர் மன்றம் மிக்கேல், பிஎன்டி காலனி முருகேசன் போக்குவரத்து மாசெ கல்வி குமார் எட்டையபுரம் நகர் செயலாளர்  ராஜ்குமார் உட்பட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் 500 பேருக்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



சுட்டெரிக்கும் வெயில் சுருண்டு விழந்த மூதாட்டி !!!
 

ஆர்ப்பாட்டத்தில் 



வெயில் தகிப்பு அதிகரித்தது இதன் காரணமாக கடும் வெயிலில் ரொம்ப நேரமா அட்டை தூக்கி உயர்த்தி பிடித்த படி நின்ற..
  மூதாட்டி தீடீரென மயங்கி விழுந்தார் அவரை மகளிர் போலீஸ் அருகில் தண்ணீர் கொடுத்து அமர செய்தார் கள் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது 

வெயில் தாக்கம்  பொருட்டாக.. ஆர்ப்பாட்டத்தில் சீக்கிரமாக பேசி முடித்தார்கள் 

அனுமதி மற்றும் கைது நடவடிக்கை இல்லை  மேடையில் தூத்துக்குடி காவல்துறை க்கு நன்றி தெரிவிப்பு !!!

ஏற்கனவே காவல்துறை அதிகாரி களிடமிருந்து ஆர்ப்பாட்டம் நடைபெற அனுமதி கோரப்பட்டதால் இன்று ஆர்ப்பாட்டம் நடத்திய தூத்துக்குடி மாவட்டம் அதிமுகவினர் மீது கைது நடவடிக்கை எடுக்க வில்லை.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக