TamilNadu updates
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பஸ் பயணிகள் கூட்டம் இன்று (16-1-2025) அதிகாரிகள் வராததால் குழப்பம்
தூத்துக்குடி, ஜனவரி 16:
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பயணிகள் கூட்டம்
16-1-2025 இன்று போக்குவரத்து அதிகாரிகள் பணிக்கு வராததால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
குழப்பமான சூழ்நிலை!!!
நேர காப்பாளர் அலுவலகம் பூட்டப்பட்டுள்ள நிலையில், அரசு போக்குவரத்து துறையின் நேர காப்பாளர்கள், செக்கர்கள் மற்றும் ஏஜென்டுகள் யாரும் பணிக்கு வராததால் பேருந்து நிலையத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.
கோவில்பட்டி, விளாத்திகுளம், மதுரை இராமநாதபுரம் திருச்சி திருப்பூர் கோவை சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வந்துள்ள பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.
பேருந்துகள் எவ்வித ஒழுங்குமுறையும் இன்றி குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தப்பட்டுள்ளன. எந்தப் பேருந்து எந்த வழித்தடத்தில் எப்போது புறப்படும் என்ற அடிப்படை தகவல்களை கூட பயணிகளால் அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து அதிகாரிகள் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தி!!!
பண்டிகை காலத்தில் அதிகாரிகள் பணிக்கு வராதது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்து துறை உடனடியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக