#தூத்துக்குடி லீக்ஸ்
நாளிதழின் முதன்மை செய்தி
## ஜனவரி 15, 2025 | புதன்கிழமை | விலை ரூ.5
---
TamilNadu updates
Photo news by sunmugasuthram Reporter
# பொங்கல் விழாவில் அமைச்சர் கீதாஜீவன் உரை:
##"தடைகளை தகர்த்தெறிந்து தமிழகம் முன்னேறுகிறது"
#"தமிழகத்தின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது"
##பொங்கல் விழாவில் அமைச்சர் கீதாஜீவன் உறுதி
தூத்துக்குடி, ஜன.15: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பவர்களின் முயற்சிகளை தகர்த்தெறிந்து, அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருவதாக அமைச்சர் கீதாஜீவன் வலுவான கருத்துக்களை முன்வைத்தார்.
###கடந்த கால
நினைவுகள்
"கடந்த ஆண்டு பெய்த கனமழையால் இந்தப் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது.
அப்போது தமிழக முதலமைச்சரின் உத்தரவின்பேரில் இரண்டு படகுகள் மூலம் மக்களை மீட்டதும், அவர்களுக்கு உதவிகள் செய்ததும் இன்றும் நெகிழ்ச்சியான நினைவுகள்," என்று அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.
### சாதனைகளின் தொடர்ச்சி
"வேலைவாய்ப்பு, மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண், தமிழ்புதல்வன் என எல்லா வகையிலும் சாதனைகள் தொடர்கின்றன. இதையெல்லாம் பொறுக்க முடியாமல் சிலர் உள்ளனர். எதிர்க்கட்சிகள் குறைகளை சொல்ல முடியவில்லை.
'நாங்கள் இருக்கிறோம்' என்ற இருப்பிடத்தை காட்டுவதற்காக மட்டுமே குறை சொல்கின்றனர்," என்று அமைச்சர் விமர்சித்தார்.
###நலத்திட்ட உதவிகள்
விழாவில் 500-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு:
- தையல் மிஷின்கள்
- மூன்று சக்கர சைக்கிள்கள்
- புதிய சேலைகள்
- வேஷ்டிகள்
ஆகியவை வழங்கப்பட்டன.
###திமுக நிர்வாகிகள் பங்கேற்பு
விழாவில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் முன்னிலை வகித்தார். மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் சங்கரநாராயணன் வரவேற்புரை நிகழ்த்தினார். வட்டச்செயலாளர் பத்மாவதி நன்றியுரை வழங்கினார்.
---
# "2026-ல் 200 தொகுதிகள் இலக்கு"
## மேயர் ஜெகன் பெரியசாமி அறைகூவல்
தூத்துக்குடி, ஜன.15:
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் அனைவரும் லட்சியப் பாதையில் பணியாற்ற வேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமி வலியுறுத்தினார்.
###மாவட்ட இலக்கு
"2024 நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி பெற்ற வெற்றியைப் போல, வரும் சட்டமன்றத் தேர்தலில் மாவட்டத்தின் அனைத்து 6 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். எதிர்க்கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் தொகையையும் இழக்க வேண்டும்," என்று மேயர் தெரிவித்தார்.
###தேர்தல் தயார்நிலை!!!
- மாநில அளவில் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்
- மாவட்ட அளவில் பணிக்குழுக்கள் அமைப்பு
- தொகுதி வாரியாக கள ஆய்வுகள் தொடக்கம்
###ஆரோக்கிய வாழ்வுக்கு விளையாட்டு
"ஒவ்வொருவருக்கும் உடல் ஆரோக்கியம் முக்கியம். அதற்கு இது போன்ற விளையாட்டுப் போட்டிகள் அவசியம். எல்லோரும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்," என்று மேயர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக