செவ்வாய், 14 ஜனவரி, 2025

பொறுப்புகள் தேடி வரும் முன்னாள் அமைச்சர் சித.செல்லப்பாண்டியன் பரபரப்பு

 Tamil Nadu updates, 15-1-2025

photo news by sunmugasuthram Reporter 

# அதிமுக வளர்ச்சிக்கு அனைவரும் பாடுபட வேண்டும்: முன்னாள் அமைச்சர் சித.செல்லப்பாண்டியன்


தூத்துக்குடிலீக்ஸ், ஜனவரி 15:

 அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றும், 2026 தேர்தலில் அதிமுக ஆட்சி அமைய அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் சித.செல்லப்பாண்டியன் தெரிவித்தார்.



தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் மற்றும் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பேசிய அவர், "அதிமுகவை உருவாக்கிய நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர், அவரது வழியில் ஜெயலலிதா ஆகியோர் கட்சியை வழிநடத்திச் சென்றனர். தற்போது மூன்றாம் தலைமுறையாக எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்" என்றார்.


##உறுப்பினர் சேர்க்கை தீவிரம்


கட்சியில் தற்போது 2 கோடியே 16 லட்சம் உறுப்பினர்கள் உள்ளதாகவும், மேலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். "ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் உள்ள பொதுமக்களையும், குடும்ப உறுப்பினர்களையும் கட்சியில் இணைக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.


##அடையாள அட்டை விநியோகம்


இதற்கிடையே, எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின்படி, தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள அலுவலகத்தில் மாநில வர்த்தக அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சித.செல்லப்பாண்டியன் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.


"ஜெயலலிதா மறைவிற்குப் பின் எடப்பாடியார் சிறப்பான ஆட்சியை நடத்தினார். 

பொறுப்பு கள் தேடி வரும்!!!

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைய அனைவரும் ஒற்றுமையாக உழைக்க வேண்டும். பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் ஆட்சி அமைந்த பின் பொறுப்புகள் தேடி வரும்," என்று செல்லப்பாண்டியன் நம்பிக்கை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக