வியாழன், 16 ஜனவரி, 2025

தூத்துக்குடியில் எம்ஜிஆரின் 108வது பிறந்த நாள் விழா

தூத்துக்குடியில் எம்ஜிஆரின் 108வது பிறந்த நாள் விழா

TamilNadu updates 

தூத்துக்குடி, 17 ஜனவரி 2025: 

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக கழகம் சார்பில் இன்று (17.01.2025) காலை 9:30 மணிக்கு, டூவிபுரம் ஏழாவது தெருவில் உள்ள மாவட்ட கழக அலுவலகம் முன்பு எம்ஜிஆரின் படத்திற்கும், அதன் பின்பு தூத்துக்குடி பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கும் மரியாதை செலுத்தப்பட்டது.



இந்நிகழ்வில், மாவட்ட அதிமுக செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில், எம்ஜிஆருக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 



பின்னர், பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் பொதுமக்களுக்கு இனிப்பு லட்டு வழங்கப்பட்டது.

  அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் இந்நிகழ்வில் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக