#தூத்துக்குடி லீக்ஸ்
நாளிதழ் முதன்மை செய்தி 17 ஜனவரி 2025
Photo news by Arunan journalist
எம்ஜிஆர் பிறந்தநாள்: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர்களிடையே மோதல்
TamilNadu updates
தூத்துக்குடி: ஜனவரி17
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் தனித்தனியாக நிகழ்ச்சிகளை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று 17-1-2025 காலை முதல் நகரின் பல்வேறு பகுதிகளில் எம்.ஜி.ஆர் படத்திற்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி, கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சண்முகநாதன்
VS
செல்லப்பாண்டியன்
தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ் பி சண்முகநாதன், சி த செல்லப்பாண்டியன் இருவரும் ஆதரவாளர்களுடன் தனித்தனியாக நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் தலைமையில்...? |
முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில்...? |
"எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எந்த முன்னாள் அமைச்சரின் நிகழ்ச்சிக்குச் செல்வது என்று குழப்பமாக உள்ளது," என்று ஒரு அதிமுக தொண்டர் வேதனையுடன் தெரிவித்தார்.
கவலையில்...?
மூத்த அதிமுக தொண்டர்கள் சிலர், "எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சிக்கு கட்டுப்பாடு இல்லை. தொண்டர்கள் திசை தெரியாமல் திணறுகிறார்கள்," என்று கவலை தெரிவித்தனர்.
இரண்டு முன்னாள் அமைச்சர்கள் ஒரே பகுதியில் தனித்தனியாக ஆதரவாளர்களுடன் வந்து லட்டு வழங்கிய காட்சி!!!
லட்டு வழங்கல் |
லட்டு வழங்கல் |
இந்நிலையில், மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலை குறித்து கட்சி தலைமையிடம் முறையிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
"இந்த சூழ்நிலை தொடர்ந்தால் வரும் தேர்தலில் கட்சி பெரும் பின்னடைவை சந்திக்க நேரிடும்," என கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் எச்சரித்துள்ளார்.
தூத்துக்குடி சிவன் கோவில் புரட்சி தலைவர் எம்ஜிஆர் பிறந்த நாள் அன்னதானம் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக