வெள்ளி, 17 ஜனவரி, 2025

தூத்துக்குடியில் எம்ஜிஆர் 108-வது பிறந்தநாள் விழா: அம்முக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

தூத்துக்குடி லீக்ஸ் 

நாளிதழ் முதன்மை செய்தி 

17 ஜனவரி 2025

Photo news by Arunan journalist 

## தூத்துக்குடியில் எம்ஜிஆர் 108-வது பிறந்தநாள் விழா: அம்முக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

TamilNadu updates 

தூத்துக்குடி: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் 108-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் அமமுக தொண்டர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.



 தூத்துக்குடி நகரின் பிரதான சாலைகளில் எம்.ஜி.ஆர் படங்களுக்கு மாலை அணிவித்து, அம்முக கொடிகள் பறக்கவிடப்பட்டன.


 நூற்றுக்கும் மேற்பட்ட அமமுக தொண்டர்கள் புரட்சித் தலைவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்க தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பிரைட் டன் தலைமையில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி பகுதிக்கு வந்தனர்



அங்கு உள்ள புரட்சி தலைவர் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் 




"எம்ஜிஆர் என்பவர் வெறும் அரசியல் தலைவர் மட்டுமல்ல, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்காக பாடுபட்டவர். அவரது கொள்கைகளை பின்பற்றி நாங்கள் செயல்பட்டு வருகிறோம்," என தூத்துக்குடி மாநகர் அமமுக மாவட்ட செயலாளர் பிரைட்டன் தெரிவித்தார்.

 புரட்சி தலைவர் எம்ஜிஆர் 



"எம்ஜிஆர் பிறந்தநாளை கொண்டாடுவது மட்டுமல்லாமல், அவரது சேவை மனப்பான்மையை பின்பற்றி ஏழை மக்களுக்கு உதவி செய்வதே எங்கள் நோக்கம்," என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


இந்நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி இனை செயலாளர் சண்முககுமாரி அமமுக அவை தலைவர் தங்க மாரியப்பன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக