வியாழன், 9 ஜனவரி, 2025

தூத்துக்குடியில் பெரியார் அவதூறு பேச்சு: சீமான் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை கோரி மனு

 # பெரியார் அவதூறு பேச்சு: சீமான் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை கோரி மனு

TamilNadu news updates

thoothukudileaks 

news by Arunan journalist 

தூத்துக்குடி, ஜனவரி 10, 2025


தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளரிடம்  மனு அளிக்கப்பட்டது.



திராவிடர் விடுதலை கழகத்தின் பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன் தலைமையிலான குழுவினர் இந்த மனுவை அளித்தனர். 


கடந்த ஜனவரி 8 ஆம் தேதி கடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சீமான் பேசிய பேச்சு தந்தை பெரியாரை இழிவுபடுத்தும் விதமாகவும், தீய நோக்கத்துடனும் அமைந்திருந்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மனு அளிக்கும் நிகழ்வில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டத் தலைவர் அகமது இக்பால் மற்றும் மாநகரத் தலைவர் அப்துல் சமது ஆகியோரும் கலந்து கொண்டனர்.



"பெரியார் சிந்தனைகளை தவறாக சித்தரித்து, திட்டமிட்டு அவதூறு பரப்பும் இத்தகைய செயல்கள் சமூக ஒற்றுமைக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது," என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு, குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக