Tamil Nadu updates
Photo news by Arunan journalist 9-1-2025
"சரக அளவில் குற்றங்கள் குறைந்துள்ளதாக திருநெல்வேலி சரக காவல்துறை அறிக்கை - 2024-ல் சாதனை புரிந்த காவல்துறை"
தூத்துக்குடி லீக்ஸ், ஜன. 9:
சென்ற ஆண்டின் செயல்பாட்டு ஆய்வு அறிக்கையை திருநெல்வேலி சரக காவல்துறை இன்று வெளியிட்டுள்ளது. பரந்துபட்ட நான்கு மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் குற்றச் செயல்கள் குறைந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரக அமைப்பு விவரங்கள்:
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி 22 காவல் உட்கோட்டங்கள் செயல்படுகின்றன.
145 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள், 21 மகளிர் காவல் நிலையங்கள், 12 போக்குவரத்து காவல் நிலையங்கள் உள்ளிட்ட அலகுகளில் 805 காவல் அலுவலர்கள், 7,766 காவலர்கள் என மொத்தம் 8,571 பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
சவால்கள் நிறைந்த பணி:
சாதிச் சண்டைகள், பழிக்குப்பழி கொலைகள், ரவுடிகளின் தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளை கையாள வேண்டிய சூழலில், 52 கொலையுண்டவர்களின் நினைவு தினங்கள் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகின்றன.
பசும்பொன் தேவர் குரு பூஜை, தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் உள்ளிட்ட 16 முக்கிய நினைவு/பிறந்த தினங்களின் போது தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
குறைந்துபோன குற்றங்கள்:
குற்றம்
2023 -2024 கணக்கெடுப்பின்படி....
குறைவு சதவீதம்
கொலைகள்
2023 -ஆம் ஆண்டு 179
2024 ஆம் ஆண்டு 176
குறைவு வீதம் 3
அதாவது 2சதவீதம்
ஆதாயக் கொலைகள்
2023 ஆம் ஆண்டு 12
2024 ஆம் ஆண்டு 2
குறைவு 83 சதவீதம்
கூட்டுக் கொள்ளை வழக்குகள்
2023 ஆம் ஆண்டு 22
2024ஆம் ஆண்டு 13
குறைவு 40 சதவீதம்
கொள்ளை வழக்குகள்
2023ஆம் ஆண்டு 197
2024 ஆம் ஆண்டு 162
35 எண்ணிக்கை குறைந்துள்ளது
குறைவு 18 சதவீதம்
SC/ST வழக்குகள்
2023ஆம் ஆண்டு 240
2024 ஆம் ஆண்டு 204
குறைவு எண்ணிக்கை 36
குறைவு 15 சதவீதம்
கொலை முயற்சி வழக்குகள்
2023 ஆம் ஆண்டு 430
2024 ஆம் ஆண்டு 303
127 குறைந்துள்ளது
குறைவு 30 சதவீதம்
கொடுங்காய வழக்குகள்
2023ஆம் ஆண்டு 357
2024 ஆம் ஆண்டு 251
106 குறைந்துள்ளது
குறைவு 30 சதவீதம்
சிறுகாய வழக்குகள்
2023 ஆம் ஆண்டு 2517
2024 ஆம் ஆண்டு 2168
349 குறைந்துள்ளது
குறைவு 14 சதவீதம்
அரசு அலுவலர்கள் மீதான தாக்குதல்
2023 ஆம் ஆண்டு 134
2024 ஆம் ஆண்டு 128
6 குறைந்துள்ளது
குறைவு 4 சதவீதம்.
குறிப்பிடத்தக்க சாதனைகள்:
- 477 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
- 4,305 பேர் மீது தடுப்புச் சட்ட நடவடிக்கை
- 25 ரவுடிகளுக்கு நீதிமன்ற கடுங்காவல் தண்டனை
- 52 கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு தண்டனை
- 61 போக்சோ குற்றவாளிகளுக்கு தண்டனை
- 316 கிலோ கஞ்சா, 14,331 கிலோ குட்கா பறிமுதல்
- 7,731 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள்:
"போதையில்லா தமிழ்நாடு" திட்டத்தின் கீழ் 268 கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், "போதை எனக்கு வேண்டாம், நமக்கு வேண்டாம்" என்ற பிரச்சார இயக்கமும் நடத்தப்பட்டது.
அனைத்து கல்லூரிகளிலும் போதை தடுப்பு விழிப்புணர்வு குழுக்கள் அமைக்கப்பட்டன.
திருவிழா பாதுகாப்பு:
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் தசரா, திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா உள்ளிட்ட பெருவிழாக்களின் போது சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 2,440 விநாயகர் சிலைகள் 43 ஊர்வலங்கள் மூலம் அமைதியாக கரைக்கப்பட்டன.
காவலர் ஊக்குவிப்பு:
- 59 காவல் நிலையங்களில் ஆய்வு
- 41 காவல் நிலையங்களில் பார்வையிடல்
- 180 காவல் அலுவலர்கள்/காவலர்களுக்கு நற்சான்று வழங்கி பாராட்டு
2025-க்கான இலக்குகள்:
- கொலைகள், சாதிய வன்முறைகள் முற்றிலும் தடுப்பு
- பள்ளி-கல்லூரிகளில் சாதிய வெறி தடுப்பு
- பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு
- ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை
- சாலை விபத்துக்கள் குறைப்பு
- அனைத்து பகுதிகளிலும் CCTV கேமரா பொருத்துதல்
- காவலர் நலத்திட்டங்கள் முறையான செயலாக்கம்
டி ஐ ஜி மூர்த்தி பேட்டி |
பாராட்டு க்கள்!!!
நான்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறையினரின் கூட்டு முயற்சியால் 2024-ல் சிறப்பான பணியாற்ற முடிந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றங்கள் குறைந்த விவரம்:
2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024-ல்:
- ஆதாயக் கொலைகள் 83% குறைவு (12-லிருந்து 2 ஆக)
- கூட்டுக்கொள்ளை வழக்குகள் 40% குறைவு (22-லிருந்து 13 ஆக)
- கொள்ளை வழக்குகள் 18% குறைவு (197-லிருந்து 162 ஆக)
- SC/ST வழக்குகள் 15% குறைவு (240-லிருந்து 204 ஆக)
- கொலை முயற்சி வழக்குகள் 30% குறைவு (430-லிருந்து 303 ஆக)
- கொடுங்காய வழக்குகள் 30% குறைவு (357-லிருந்து 251 ஆக)
- சிறுகாய வழக்குகள் 14% குறைவு (2,517-லிருந்து 2,168 ஆக)
- அரசு அலுவலர்கள் மீதான தாக்குதல் 4% குறைவு (134-லிருந்து 128 ஆக)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக