Tamil Nadu updates,6-1-2025
Photo news by tamilan Ravi reporter
27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிரியர்களை சந்தித்து நெகிழ்ந்த முன்னாள் மாணவர்கள்
தூத்துக்குடி லீக்ஸ், ஜன. 6-
தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1996-ஆம் ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களை நேற்று சந்தித்து நெகிழ்ச்சியான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
27 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த சந்திப்பு நிகழ்வில், முன்னாள் மாணவர்கள் அனைவரும் "காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 1996 பாட்ஜ் ரீயூனியன்" என்று அச்சிடப்பட்ட ஒரே மாதிரியான டி-சர்ட் அணிந்து கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்து, நினைவுப் பரிசுகளை வழங்கினர். அன்றைய தினம் பிறந்தநாள் கொண்டாடிய ஒரு ஆசிரியருக்கு கேக் வெட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
பள்ளி காலத்து நினைவுகளை மீட்டெடுத்த மாணவர்கள், தங்கள் பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கி தங்கள் நன்றியை வெளிப்படுத்தினர். நிகழ்வின் நினைவாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
நிகழ்வின் நிறைவில், அனைவருக்கும் வாழை இலையில் விருந்து பரிமாறப்பட்டது. பள்ளிக்கால நினைவுகளுடன் கூடிய இந்த சந்திப்பு நிகழ்வு அனைவருக்கும் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக