Tamil Nadu updates,5-1-2025
news by Arunan journalist
"மக்கள் சேவையில் 5 ஆண்டுகள்: தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றத் தலைவரின் பணிக்காலம் நிறைவு"
தூத்துக்குடி லீக்ஸ் ஜன.5-
தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றத் தலைவர் R.சரவணக்குமார் தனது ஐந்தாண்டு கால பதவிக் காலத்தை இன்று நிறைவு செய்துள்ளார்.
மக்கள் நலனுக்காக அயராது உழைத்த இவரது சேவைகளுக்கு ஊராட்சி மக்கள் பெரும் ஆதரவு அளித்து வந்துள்ளனர். ஐந்தாண்டு காலத்தில் ஊராட்சியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், மக்களின் குறைகளை களைவதிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்துள்ளார்.
உள்ளாட்சி நிர்வாகத்தில் சிறந்த முன்மாதிரியாக திகழ்ந்த சரவணக்குமாரின் சேவைகள் மக்களால் பெரிதும் பாராட்டப்படுகின்றன.
அவரது பணிக்காலம் மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்களை நிறைவேற்றியதாக அமைந்துள்ளது.
மாப்பிள்ளையூரணி ஊராட்சியின் வளர்ச்சிப் பாதையில் இந்த ஐந்தாண்டுகள் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக