ஞாயிறு, 5 ஜனவரி, 2025

உண்மை பேசும் கூட்டணித் தலைவர் மீதான மிரட்டல்: பாஜக கண்டனம்

Tamil Nadu updates,5-1-2025
thoothukudileaks 

"உண்மை பேசும் கூட்டணித் தலைவர் மீதான மிரட்டல்: பாஜக கண்டனம்"



 சென்னை, ஜன.5-

 திமுக அரசின் கூட்டணிக் கட்சித் தலைவர் ஒருவர் அரசின் செயல்பாடுகளை விமர்சித்ததற்காக மிரட்டப்படுவது கடும் கண்டனத்துக்குரியது என தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார். 


 இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 


 "சிந்து சமவெளி மற்றும் கீழடி நாகரீகம் குறித்த கருத்தரங்கில், சம்பந்தமில்லாமல் திமுக அரசின் செயல்பாடுகளை முதல்வர் புகழ்ந்து பேசியது வருத்தத்தை அளிக்கிறது.


 1967-ல் இருந்து திமுக ஆட்சிக் காலங்களில் வரலாற்றைத் திருத்தி பேசி மக்களை ஏமாற்றி வருகிறது." 

மிரட்டல்!!!
 "தற்போது தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை அமுலில் உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எழுப்பிய கேள்விக்கு, முரசொலி பத்திரிகை மிரட்டல் விடுத்துள்ளது.


யார் அவர்?" என்ற கேள்வி கேட்டு, கூட்டணி கட்சித் தலைவரையே பதவி நீக்கம் குறித்து மிரட்டுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றார்.


 இது தமிழக அரசியலில் மிகவும் ஆபத்தான போக்காகும்." "அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும். 

பிரச்சினையை திசை திருப்பும் முயற்சிகளை கைவிட வேண்டும்" என்று பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.




திரைத்துறையினர் மௌனம் ஏன்?

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் திரைத்துறையினர் மௌனம் சாதிப்பது குறித்தும் கேள்வி எழுப்பினார்.

 "முன்பெல்லாம் மக்கள் பிரச்சினைகளில் குரல் கொடுத்த நடிகர்கள், இப்போது ஏன் மௌனமாக உள்ளனர்?" 

 "தமிழக எதிர்க்கட்சிகள் அனைத்தும் துணிந்து திமுக அரசின் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும். அதுவே தமிழக மக்களுக்கு நாம் செய்யும் கடமையாகும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக