உண்மைக்கு புறம்பாக பொய் செய்தி பிரபல டிவி வெளியிட்டுள்ளது என தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர்
ஆல்பர்ட் ஜான் இ.கா.ப மறுப்பு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் 11.09.2024
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தண்ணீர் நீர் தேக்க தொட்டி மீது ஏறி மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தினார். -
இந்த செய்தியை மது, கஞ்சா போதைக்கு அடிமையாகி நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் என்று குறிப்பிட்டு உண்மைக்கு புறம்பாக பிரபல செய்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது பற்றிய செய்தியாவது:-
நேற்று (10.09.2024) காலை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு திட்டங்குளம் பகுதியில் உள்ள தண்ணீர் நீர்த்தேக்க தொட்டி மீது மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் ஏறி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
என்ன நடந்தது!!!
இதுகுறித்த தகவல் அறிந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் அங்கு வந்து மேற்படி நபரிடம் வெகு நேரமாக போராடி பத்திரமாக கீழே இறக்கி அவரது தாய் தந்தையரிடம் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் நீர்தேக்க தொட்டி மீது ஏறியவர் வடக்கு திட்டங்குளம் பகுதியைச் சேர்ந்த திருமேனி சரவணன் என்பவரது மகன் ஜோதி ரமேஷ் (25) என்பதும், கடந்த 10 வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்ட அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது.
மன நலம் பாதிப்பு சிகிச்சை எடுத்து வருபவர்!!!
மேலும் கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் வடக்கு திட்டங்குளத்திலிருந்து குடிபெயர்ந்து தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர் நகர் பகுதியில் தனது தாய் தந்தையுடன் வசித்து வந்தும் தற்போது தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மேற்படி ஜோதி ரமேஷ் மருந்து மாத்திரை உட்கொள்ளாமல் இருந்து வந்த நிலையில் சங்கரன்கோவிலிலிருந்து சொந்த ஊரான வடக்கு திட்டங்குளத்திற்கு வந்த அவர் மனநிலை சரியில்லாமல் நேற்று (10.09.2024) காலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி தகராறில் ஈடுபட்டதும் பின்னர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினரின் மூலம் பத்திரமாக கீழே இறக்கப்பட்டு அவரது தாய் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
பொய் செய்தி பிரபல டிவி!!!
இந்த செய்தியை மது, கஞ்சா போதைக்கு அடிமையாகி நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் ....
என்று குறிப்பிட்டு உண்மைக்கு புறம்பான செய்தியை பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டுள்ளது முற்றிலும் மறுக்கப்படுகிறது.
மறுப்பு!!!
எனவே இதுபோன்ற செய்தியின் உண்மைத்தன்மை தெரியாமல் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட வேண்டாம் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக