விஜிலென்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விஜிலென்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 26 அக்டோபர், 2026

தூத்துக்குடியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் காவல் துறை மற்றும் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

 Tamil Nadu updates, 

photo news by Arunan Reporter 

​தூத்துக்குடியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம்  தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் காவல் துறை மற்றும் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

​தூத்துக்குடி, அக்டோபர் 27:

தூத்துக்குடி மாவட்டம் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை சார்பில், "நேர்மையே வளமை" (Probity for Prosperity) என்னும் தலைப்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது. இந்த விழிப்புணர்வு வாரமானது கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி தொடங்கி வரவிருக்கும் நவம்பர் 1-ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.

thoothukudileaks  vigilance news


​இதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திற்குள் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளர்கள் அன்னலட்சுமி மற்றும் அனிதா டீம்  காவல் துறையினர் கலந்துகொண்டு பயணிகள் மத்தியில் சிறப்புரையாற்றினர்.


​லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் சட்டப்படி குற்றம் என்பதை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், கல்லூரி மாணவர்களை வரவழைத்து விழிப்புணர்வு நாடகம் நடித்துக் காட்டப்பட்டது. இந்த நாடகம் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், அனைவரையும் சிந்திக்க வைக்கும் வகையில் அமைந்தது.


thoothukudileaks  vigilance news
வியாபாரி இடம் லஞ்சம் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கிய போது

thoothukudileaks  vigilance news
தூய்மை பணியாளர்கள் இடம் லஞ்சம் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி போது..


தூத்துக்குடி லீக்ஸ்


thoothukudileaks  vigilance news


thoothukudileaks  vigilance news


​மேலும், லஞ்சம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் எவ்வித பயமின்றி நேரில் அல்லது தொலைபேசி மற்றும் செல்போன் வாயிலாகத் தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறையின் அலுவலக முகவரி மற்றும் புகார்களைத் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டன; 

அவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் பெற்றுச் சென்றனர்.