வியாழன், 6 பிப்ரவரி, 2025

மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதாக கூறி நூதன மோசடி – காவல்துறையின் எச்சரிக்கை!

தூத்துக்குடி லீக்ஸ் 06.02.2025 | தூத்துக்குடி மாவட்டம்


மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதாக கூறி நூதன மோசடி – காவல்துறையின் எச்சரிக்கை!


தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் உதவித்தொகை வழங்குவதாக கூறி பண மோசடி செய்வது தொடர்பாக மாவட்ட காவல்துறையினர் பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



மத்திய மற்றும் மாநில அரசு உதவி தொகை மையத்தில் இருந்து பேசுகிறோம்...என்று கூறி, மாணவர்களின் பெயர், பள்ளி/கல்லூரி விவரங்கள், மதிப்பெண்கள் போன்ற தகவல்களை கேட்டு, "உங்களுக்கான உதவித்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது" என தகவல் தருகின்றனர்.


 பின்னர், அந்த தொகையை பெற ஒரு QR கோடு அல்லது லிங்க் அனுப்பி, அதை ஸ்கேன் செய்யுமாறு கூறுகின்றனர்.


QR கோடு ஸ்கேன் செய்தவுடன், வங்கி கணக்கில் உள்ள பணம் முறைகேடாக எடுத்துக்கொள்ளப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.


பொதுமக்கள் கவனத்திற்கு:


✅ உதவித்தொகைக்கு விண்ணப்பித்திருந்தாலும், விண்ணப்பிக்காத நிலையிலும் இத்தகைய அழைப்புகளை நம்ப வேண்டாம்.

✅ எந்தவிதமான தனிப்பட்ட தகவல்களையும் பகிர வேண்டாம்.

அனுப்பப்படும் QR கோடு ஸ்கேன் செய்யக் கூடாது.

✅ உண்மையான உதவித்தொகை இருப்பதை உறுதிப்படுத்த பள்ளி/கல்லூரி நிர்வாகத்தினை தொடர்பு கொள்ளலாம்.


மோசடிக்கு இரையானவர்கள் உடனடியாக புகார் செய்ய வேண்டும்!


மோசடிக்கு இலக்கானவர்கள் பண பரிவர்த்தனை விவரங்களை பதிவு செய்து உடனடியாக 1930 என்ற சைபர் குற்றப்பிரிவு உதவி எண்ணிற்கு அழைக்கலாம் அல்லது cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.


இவ்வாறு புகார் செய்தால் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக