செவ்வாய், 31 டிசம்பர், 2024

தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் புத்தாண்டு கொண்டாட்டம்

தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் புத்தாண்டு கொண்டாட்டம்

---------------------------------------------------

பத்திரிகையாளர்கள் கேக் வெட்டி, வெடி வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்


தூத்துக்குடி,2025 ஜன.1:


தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் 2025-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் தமிழ் சாலையில் உள்ள கிளப் தலைமை அலுவலகத்தில் நள்ளிரவு 12 மணிக்கு விமரிசையாக நடைபெற்றது.



பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் செயலாளர் மோகன்ராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் துணைத் தலைவர் சிதம்பரம், மூத்த பத்திரிகையாளரும் கௌரவ ஆலோசகருமான ஆத்திமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



செயற்குழு உறுப்பினர்களான மாரிராஜா, முத்துராமன், கண்ணன் உள்ளிட்டோர் முன்னிலையில் தூத்துக்குடி பிரஸ் கிளப் பெயர் பொறிக்கப்பட்ட சிறப்பு கேக் வெட்டப்பட்டது. தொடர்ந்து பத்திரிகையாளர்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது.



பின்னர் கிளப் அலுவலக வாசலில் பட்டாசுகள் வெடித்து புத்தாண்டு கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட லசால் பள்ளி ஆசிரியர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். முன்னாள் செயலாளர் இசக்கிராஜா மற்றும் சூர்யா செய்தியாளர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக