Tamil Nadu updates,
Photo news by Arunan journalist
#கொட்டும் மழையிலும் குறையாத கூட்டம்: தூத்துக்குடியில் அதிமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
31 டிசம்பர் 2024, செவ்வாய்
பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்தும், அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கோரியும் தூத்துக்குடியில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி ஆணைக்கிணங்க இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்று 31-12-2024 காலை 10.30 மணிக்கு தூத்துக்குடி12- வது வாசல் மையவாடி எதிராக உள்ள எம்.ஜி.ஆர் திடலில் நடைபெற்றது.
கொட்டும் மழையில்.... |
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை வகித்தார்.
### முக்கிய கோரிக்கைகள்
சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசின் செயல்பாடுகளைக் கண்டனம்
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய முதல்வர் மு.க.ஸ்டாலினின் "திராவிட மாடல் ஆட்சி"யைக் கண்டித்து
பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கோரி
கனமழை பெய்து கொண்டிருந்த போதிலும், ஆர்ப்பாட்டத்தில் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். சமூக நீதிக்கான இந்த போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் 1000 த்திற்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் மகளிர் கள் கலந்து கொண்டனர் மாவட்ட காவல்துறை கைது செய்து தூத்துக்குடி பானு பிருந்தா மஹாலில் அடைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக